வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை; இந்தியாவின் முடிவுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்!
ஸ்டட்கார்ட்(ஜெர்மனி), கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. உள்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்கவும், கோதுமையை வாங்கும் தனியார் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கருதி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, கோதுமை ஏற்றுமதியை தடை செய்திருப்பது, உக்ரைன் போர் காரணமாக விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. … Read more