லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழப்பு- ஐ.நா.தகவல்

14.05.2022 04.10: உக்ரைனை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷியாவின் தோல்வி வெளிப்படையானது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். எனினும் வான்வெளித் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் உண்மையை மறைக்க ரஷிய படைகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 02.30: நேட்டோ அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் மற்றும் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ ஆகியோருடன் ஜோ பைடன்  தொலைபேசி … Read more

பேச்சு நடத்தும் சூழலில் பாக்., இல்லை: வெளியுறவுத்துறை அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-‘இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்கான பேச்சை நடத்தும் சூழல் தற்போது இல்லை’ என, பாக்., வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் பதவி ஏற்றவுடன், ‘இந்தியாவுடனான நல்லுறவை பாக்., விரும்புகிறது. ஆனால், காஷ்மீர் பிரச்னை தீரும் வரை,நீடித்த அமைதி சாத்தியமில்லை’ என தெரிவித்தார். இதற்கிடையே, டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில், இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், வர்த்தக அதிகாரியை பாக்., அரசு நியமித்துள்ளது. இதையடுத்து, … Read more

ஜப்பான் கடற்பகுதியில் 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென்கொரியா அறிவிப்பு!

ஜப்பான் கடல் பகுதியில், வடகொரியா 3 ஏவுகணைகளை ஏவி சோதித்து பார்த்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் வடகொரியா நடத்திய 16வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால் அங்கு ஊரடங்கு பிரகடனப் படுத்தப்பட்டதன் … Read more

கரீபியன் தீவில் கடலில் படகு கவிழ்ந்து 11 அகதிகள் சாவு

சான் ஜுவான், அகதிகள் தஞ்சம் கரீபியன் தீவுநாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன் முறையும், மறுபுறம் வறுமையும் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் அந்த இரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் செய்து அமெரிக்காவை அடைகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்துவிடுகிறது. கடலில் கவிழ்ந்தது இந்த நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த … Read more

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்து மாநாட்டு மையத்தினுள் புகுந்து நின்ற டெஸ்லா கார்.!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டெஸ்லா கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகமாக சென்று கொலம்பஸ் மாநாட்டு மையத்தின் கண்ணாடி சுவற்றை உடைத்து உள்ளே புகுந்த  காட்சிகள் வெளியாகி உள்ளன. இது குறித்து ஓட்டுநரிடம் கேட்டபோது, சாலையில் சென்று கொண்டிருந்த போது  திடீரென பிரேக் பழுதாகியதால் விபத்து நேர்ந்ததாக கூறியுள்ளார். Source link

"மே மாதத்தின் மையத்தில் கடும் வெப்ப அலை வீசும்!" பாகிஸ்தான் வானிலை மையம் எச்சரிக்கை!

காராச்சி, பாகிஸ்தானில் மே மாதத்தின் மத்தியும் கடுமையான வெப்ப அலை வீசும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் சுட்டெரிக்கும் வெப்பநிலை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து மாகாணங்களுக்கும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  சராசரி வெப்பநிலை 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து கடுமையான … Read more

எருவில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோமெத்தானால் எரிபொருளில் ஓடும் கார்.. 200 லிட்டர் எரிபொருளில் 2 ஆயிரம் கி.மீ பயணிக்கலாம்..!

பிரான்ஸ் நாட்டில் விலங்குகளின் கழிவுகளை எருவாக்கி, அதில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோமெத்தனால் எரிபொருளை பயன்படுத்தி வேகமாக ஓடும் காரை தனியார் பொறியியல் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் வடிவமைத்துள்ளனர். இதற்காக ரெனால்ட் ஸோய் காரை அவர்கள் சற்றே மாற்றியமைத்து அதில் ஒரு சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மற்றும் எரிபொருள் டேங்கையும் பொருத்தியுள்ளனர். எரிபொருள் டேங்கில் ஊற்றப்பட்டுள்ள 200 லிட்டர் அளவுள்ள திரவ பயோமெத்தனாலில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் வாயு காரை ஓடச்செய்கிறது. அந்த காரில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் … Read more

நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் – ஆசிய வளர்ச்சி வங்கி

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,372 கோடி) கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி … Read more

“உக்ரைனில் பள்ளிகள் மீதான தாக்குதலை ரஷ்ய படைகள் நிறுத்த வேண்டும்” – ஐ.நா. குழந்தைகள் நிதியம்

உக்ரைனில், பள்ளிகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதை ரஷ்ய படைகள் நிறுத்த வேண்டுமென ஐ.நா. குழந்தைகள் நிதியம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஐ.நா குழந்தைகள் நிதிய துணை நிர்வாக இயக்குனர் உமர் அப்டி, உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வேதனை தெரிவித்தார். உக்ரைன் முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் ராணுவ நோக்கங்களுக்காக பள்ளிகளை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் … Read more