நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் – ஆசிய வளர்ச்சி வங்கி

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,372 கோடி) கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி … Read more

“உக்ரைனில் பள்ளிகள் மீதான தாக்குதலை ரஷ்ய படைகள் நிறுத்த வேண்டும்” – ஐ.நா. குழந்தைகள் நிதியம்

உக்ரைனில், பள்ளிகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதை ரஷ்ய படைகள் நிறுத்த வேண்டுமென ஐ.நா. குழந்தைகள் நிதியம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஐ.நா குழந்தைகள் நிதிய துணை நிர்வாக இயக்குனர் உமர் அப்டி, உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வேதனை தெரிவித்தார். உக்ரைன் முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் ராணுவ நோக்கங்களுக்காக பள்ளிகளை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் கலிபா பின் சயீத் காலமானார்| Dinamalar

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபரும், அபுதாபியின் மன்னருமான ஷேக் கலிபா பின் சயீத் காலமானார்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிபா பின் சயீத், 73, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.எமிரேட்சின் முதல் அதிபராக, அல் நஹ்யான், 1971 – 2004 வரை பதவி வகித்தார். அவரது மறைவுக்குப் பின், 2004ல் இரண்டாவது அதிபராக, அவரது மகன் ஷேக் கலிபா பின் சயீத் பதவி ஏற்றார்.அதிபர் மறைவையொட்டி, தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. … Read more

கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் வரும் 17 ஆம் தேதி முதல் செயல்படும்: வெளியுறவுத்துறை

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தது. போர் தீவிரம் அடைந்ததையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது.  உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் இருந்து  இந்திய தூதரகம் இயங்கி வந்தது.  இந்த நிலையில்,  உக்ரைனின் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் வரும் 17 ஆம் தேதி முதல் செயல்பட துவங்கும்  என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து … Read more

அமெரிக்காவில் சிறுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட உரத்தின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் பேராசிரியர்கள்.!

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர்கள் இருவர் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்தின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். சிறுநீரில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அடங்கியுள்ள நிலையில் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட உரத்தை நான்சி, கிறிஸ்டா ஆகிய பேராசிரியர்கள் நிக்கோலஸ் ஆர்போரேட்டம் பூங்காவில், வசந்த காலத்தில் பூக்கும் பூச்செடிகளை நட்டு வைத்து, அவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதன் மூலம், சுற்றுச்சூழல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கிடைக்கும் பலன்களை அவர்கள் பார்வையாளர்களுக்கு எடுத்துக்கூறியும் வருகின்றனர். Source … Read more

"ரஷியாவின் இந்த செயல் முட்டாள்தனம்" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ், உக்ரைனில் போர் தொடுத்துள்ள ரஷியா தற்போது கிழக்கு பிராந்தியமான டான்பாசில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி முதல் இதுவரை உக்ரைனில் மொத்தம் 570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.  பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை குறிவைத்து ரஷிய துருப்புகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், பிப்ரவரி 24-ல் படையெடுப்பு தொடங்கியது முதல் 570 சுகாதார மையங்களும் 101 மருத்துவமனைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக … Read more

அமெரிக்காவில் உடலில் தீ வைத்துக் கொண்டு வித்தியாசமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடி..!

அமெரிக்காவில் சாகசக் கலைகளில் ஈடுபடும் காதல் ஜோடி ஒன்று தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த எண்ணி, உடலில் தீ வைத்து பங்கேற்றனர். சாகசக் கலைஞர்களான கேப் ஜெசாப் – ஆம்பிர் பாம்பிர் காதல் ஜோடி தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த முடிவு செய்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்த இந்த காதல் ஜோடி, முதுகு பகுதியில் தாங்களே தீயை பற்ற வைத்துக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையத் உடல் நலக்குறைவால் காலமானார்.!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையத், உடல் நலக்குறைவால் காலமானார். 75 வயதான ஷேக் கலிபா கடந்த 2004ஆம் ஆண்டில் அந்நாட்டின் இரண்டாவது அதிபராக பொறுப்பேற்றார். அவரது மறைவை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 40 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷேக் கலிபா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, அவர் தலைமையில் இந்தியா – … Read more

நிலவில் விவசாயம் செய்ய அமெரிக்கா திட்டம்? நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் தாவரம் வளர்ப்பு..!

நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறிப்பிட்ட தாவர இனம் ஒன்றை வளர்த்துள்ளனர். Thale Cress எனும் காலிஃபிளவர் மற்றும் புரொக்கோலி இனத்தை சார்ந்த தாவரத்தை 12 கிராம் எடை கொண்ட நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் வைத்து,நீர்,ஒளி மற்றும் ஊட்டச்சத்து கொடுத்து வளர்த்ததாக புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மண் 1969 முதல் 1972 வரை முன்னெடுக்கப்பட்ட அப்போலோ நிலவு திட்டத்தில் பூமிக்கு கொண்டுவரப்பட்ட மண் என தெரிவித்த விஞ்ஞானிகள், நிலவில் … Read more