அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் பலி..!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திடீரென நுழைந்த மர்மநபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெஃப் உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், சேவியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். Source … Read more

அதிகரிக்கும் குரங்கு அம்மை | Dinamalar

காங்கோ : ஆப்ரிக்க நாடான காங்கோவில் குரங்கு அம்மை பரவியுள்ளது. நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.பல வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் 200 பேர் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.35 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more

புதின் எதிர்ப்பாளர் அலெக்சி நவால்னி மீது கிரிமினல் வழக்கு.!

ரஷ்ய அதிபர் புதின் விமர்சகரான எதிர் கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மீது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட முயன்றதாக நவால்னி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நவால்னி, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடுதலாக 15 ஆண்டுகள் சிறையில இருக்க … Read more

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கொழும்பு துறைமுகத்தில் இலவச மிதிவண்டி சேவை தொடக்கம்

கொழும்பு : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்நாட்டு அரசு பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதனால் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். இலங்கை விமானங்கள், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பி செல்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகத்தில், இலவச மிதிவண்டி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதன் … Read more

இந்தியா சார்பில் இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் டன் டீசல்

புதுடெல்லி: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து அரிசி, பால் பவுடர், மருந்துப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவில் இருந்து பல தவணைகளாக பெட்ரோல், டீசலும் அனுப்பப்பட்டது. கடந்த 21-ம் தேதி 40,000 டன் டீசலை இந்தியா அனுப்பி வைத்தது. இந்நிலையில், இலங்கைக்கு மேலும் 40,000 டன் டீசலை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. … Read more

உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை..!

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவுவதற்காக சிறப்பு பிராத்தனை மேற்கொண்டார். இத்தாலி ரோம் நகரின் தேவாலயத்தில் நடைபெற்ற சர்வதேச பிராத்தனையில், பிஷப்கள்-பாதிரியார்கள், வாடிகனுக்கான உக்ரைன் தூதர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கிறிஸ்துவ மத கடவுளின் தாய் என்றழைக்கப்படும் மேரி அன்னையிடம், வன்முறை மற்றும் பழிவாங்கும் இதயங்களை சமாதானம் செய்ய வேண்டி … Read more

சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி

ஷாங்காய் : சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் விலக்கி கொள்ளப்பட்டது. ஷாங்காய் அதிகாரிகள் வீட்டு வளாகங்களைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றத் தொடங்கினர். இதன் மூலம், நகரத்தின் 25 மில்லியன் குடியிருப்பாளர்களும் விடுதலை அடைந்தது போல் உணர்ந்தனர். நேற்று முதல் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் மற்றும் மக்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பொது இடங்களுக்குள் நுழையவும் பொதுமக்கள் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கு ஒருமுறை … Read more

நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு – விபத்து தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு நியமனம்

காத்மாண்டு: விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்புப் பெட்டி நேற்று கண்டெடுக்கப்பட்டது. நேபாள நாட்டிலுள்ள தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9 என்-ஏஇடி’ என்ற சிறிய ரக விமானம் பொக்காராவிலிருந்து மத்திய நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான ஜோம்சோம் நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விமானத்தைத் தேடும் … Read more

மியான்மரில் பேருந்து நிறுத்தம் அருகே வெடிகுண்டு தாக்குதல்.!

மியான்மர் யங்கூன் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை குற்றஞ்சாட்டிய  நிலையில், எந்த அமைப்பும் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. பேருந்துக்காக காத்திருந்தவர்கள் என பலர் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்றை பாதுகாப்பு வீரர்கள் பறிமுதல் செய்தனர்.   Source link