நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய நேட்டோ அமைப்பில் தாமதமின்றி சேர வேண்டும் – பின்லாந்து மக்களின் விருப்பத்துக்கு அதிபர், பிரதமர் ஆதரவு

ஹெல்சிங்கி: நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்துக்கு பின்லாந்து அதிபர் மற்றும் பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளனர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர உக்ரைன் முயற்சி செய்ததால் அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இப்போர் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனை போலவே ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தும் நேட்டோவில் சேர விரும்பியது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு நேட்டோவில் சேர பின்லாந்து மக்களிடம் ஆர்வம் … Read more

நான் ஷிரீன் அபு அக்லே… இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஊடகக் குரல்!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக் கரை பகுதிகளில் மணல் மேடான சாலையில் சரிந்து கிடத்த ஷிரீனை காக்கும்படி அருகிலிருக்கும் மற்றொரு பெண் பத்திரிகையாளர் கதறுகிறார். அவர் ஷிரீன் உடல் அருகே செல்லும் போதெல்லாம் துப்பாக்கிச் சூடு சத்தம் தீவிரமாக கேட்கிறது. இதனைக் கண்ட அப்பகுதி பாலஸ்தீன இளைஞர் ஒருவர் ஷிரீனின் உடல் அருகே செல்கின்றார். பின்னர் அருகிலிருந்து பெண் பத்திரிகையாளர்களை அங்கிருக்கும் தடுப்பு சுவர் ஏறி தப்பிக்கச் சொல்கிறார். பின்னர் துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியில் குனிந்தபடி … Read more

டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்து ரூ.365க்கு வர்த்தகம்.!

இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரம சிங்கேவை, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்துப் பேசினார். நேற்று பிரதமராக பெறுப்பேற்ற பின் பேசிய ரணில், இந்தியா உடனான உறவை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல் வெளிநாட்டு தூதராக இந்தியாவின் கோபால் பாக்லே, கொழும்புவில் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்துப் பேசினார். இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலை குறித்து அவர்கள் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே புதிய பிரதமராக ரணில் பொறுப்பேற்றதை தொடர்ந்து, … Read more

‛‛தீப்பிடிக்க தீப்பிடிக்க திருமணம் செய்த தம்பதி: வீடியோ வைரல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: திரைப்படங்களில் வருவதுபோல உடலில் தீப்பற்றி எரிய திருமண வரவேற்பு நடத்திய தம்பதிகளின் செயலால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இப்போதெல்லாம் திருமணத்தை பலரும் விதவிதமாக நடத்தி ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். ஆகாயத்தில், கடலடியில் என திருமணத்தை ரசித்து புதுவிதமாக கொண்டாடுவது இயல்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு தம்பதி, அனைவரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படும் வகையில் திருமணம் செய்துள்ளனர். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி கலைஞர்களான (ஸ்டன்ட் மாஸ்டர்கள்) கேபே ஜெசாப் மற்றும் … Read more

கரோனா பரவல்: 10 ஆயிரம் பேரை தனிமைப்படுத்திய வடகொரியா

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுமார் 10,000 பேரை வடகொரியா தனிமைப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குகூட பாதிப்பு ஏற்படவில்லை என பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஒமைக்ரான் வைரஸ் என்று கூறப்படுகிறது. சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு … Read more

நாடாளுமன்றத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.. இதுவரை 10 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இறந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனிடையே, நாடு ஒரு துயர மைல்கல்லை எட்டியிருப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.  Source link

டுவிட்டர் வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதற்கான பணியையும் அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், டுவிட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டுவிட்டரில் போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால், இந்நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், போலி கணக்கு பிரச்சினை டுவிட்டர் ஒப்பந்தத்தைத் தடுக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், … Read more

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்: எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு

நியூயார்க்: ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் மஸ்க், அதனை கைப்பற்ற வேண்டும் என்ற தனது கோபத்தை தொடர்ந்து … Read more

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்.. உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவிப்பு..!

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலகின் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் ஒரு பங்கு 54 அமெரிக்க டாலர் என்ற விலைக்கு மொத்தம் 4400 கோடி டாலருக்கு வாங்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்தார். தற்போது அமெரிக்க பங்குச் சந்தையில் டிவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு 45 டாலருக்கு விற்பனையாகிறது. மொத்த டிவிட்டர் பயனாளர்கள் எண்ணிக்கையில் போலி கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று டிவிட்டர் … Read more