சிவில் சர்வீஸ் வேலைகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க ஜான்சன் உத்தரவு

அரசு வேலைவாய்ப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு முடிவெடுத்திருக்கிறது. வரிக் குறைப்புகளுக்காக பணம் தேவைப்படும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முடிவை எடுத்திருப்பதாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறும் பிரிட்டன் பிரதமர், தனது அமைசரவையின் தனது உயர்மட்ட குழுவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மக்களின் அடிப்படை செலவுகள் தற்போது மிக அதிகமாக உள்ளது … Read more

91,000 குடிமைப் பணி அலுவலர்களை பணியில் இருந்து நீக்க முடிவு? அரசு செலவை குறைக்க பிரிட்டன் பிரதமர் நடவடிக்கை என தகவல்..!

அரசுக்கு ஆகும் செலவை குறைக்க 91 ஆயிரம் குடிமைப் பணி அலுவலர்களை பணியில் இருந்து நீக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் அன்றாட வாழ்க்கை செலவு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், நலிவடைந்த குடும்பங்கள் மீது உள்ள பொருளாதார சுமையை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிமைப் பணி அலுவலர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 3.5 பில்லியன் பவுண்ட், அதாவது … Read more

கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தான் கராச்சியில் எப்போதும் பிசியாக காணப்படும் சத்தார் மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.  இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேலும், காயமடைந்தோரில் சிலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.  குண்டு வெடிப்பின்போது அருகில் இருந்த பல வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதில் அரசு அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக டிஐஜி சார்ஜீல் கரல் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், வெடிகுண்டானது உள்ளூரில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும்,  சைக்கிளின் கேரியரில் … Read more

பிரேசிலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பார்பிக்யூ திருவிழா… 70 ஆயிரம் பேர் வரை பங்கேற்பு.!

பிரேசிலின் பாரா மாகாணத்தில் உள்ள பாராவ்பேபஸ் நகர் உருவானதன் 34-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சிட்டி ஹாலில், பிரம்மாண்ட பார்பிக்யூ திருவிழா நடைபெற்றது. இதில் 20 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான பார்பிக்யூக்கள் சமைக்கப்பட்டன. உலகிலேயே முதல் முறையாக அதிக அளவிலான இறைச்சியை கொண்டு தயாரிக்கப்பட்ட பார்பிக்யூக்களை சுவைக்க, அந்த திருவிழாவில் 70 ஆயிரம் பேர் வரை பங்கேற்றனர்.   Source link

பிரதமர் மோடிக்கு இலங்கை புதிய பிரதமர் விக்ரமசிங்கே நன்றி!

மோசமான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கையின் இந்த நெருக்கடி நிலைமைக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்ப … Read more

பொருளாதாரத் தடைகளால் மேலைநாடுகளுக்கே பாதிப்பு அதிகம் – புடின்

பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவை விட மேலைநாடுகளுக்கே பாதிப்பு அதிகம் என அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ராணுவ தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதையடுத்து உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் பல நாடுகள் உணவுத்தட்டுப்பாடு அபாயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். … Read more

இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தம் என்பது தவறான தகவல் – இந்திய தூதரகம் விளக்கம்

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.  இதற்கிடையே, இலங்கையின் 26-வது பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். அதன்பின் பேசிய … Read more

உய்குர் முஸ்லிம்களை இன படுகொலை செய்கிறதா சீனா: கேள்விகளை எழுப்பும் தரவுக் கசிவு

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட உய்குர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் கவலைகளை அதிகரித்துள்ளன. சீனாவின் தரவுத்தளத்தில் இருந்து கசிந்த பட்டியல் இதனை வெளிப்படுத்துவதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளால் நெருக்கமாகப் பாதுகாக்கப்படும் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் மற்ற பெரும்பான்மையான முஸ்லீம் சிறுபான்மையினரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் தடுப்பு மையங்கள் மற்றும் சிறைகளின் இரகசிய வலையமைப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் படிக்க … Read more

வட கொரியாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு

வட கொரியாவில் கொரோனா பெருந்தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வட கொரியாவில் நேற்று முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங் வுன் அங்கு ஊரடங்கை பிரகடனப்படுத்தி உள்ளார். நேற்று 18,000 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் இன்று 3 லட்சத்து 50,000 பேர் காய்ச்சலுக்காக தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி வழங்க முன்வந்த … Read more

இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – 17ல் விவாதம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, வரும் 17 ஆம் தேதி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி உள்ள அந்நாட்டில், கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் … Read more