உக்ரைன் ரஷ்ய சண்டையால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன்

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பால் எண்ணற்ற பிரச்சனைகளும், உயிரிழப்பும் தொடர்ந்து வரும் நிலையில், மற்றொரு முக்கியமான செய்தி வெளியாகி கவலைகளை அதிகரித்துள்ளது.  ரஷ்யா போர் தொடங்கிய பின்னர், இதுவரை 50 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்ப்பு ILO (International Labour Organization) கூறுகிறது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் தூண்டப்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், நாட்டிலும் அண்டை நாடுகளிலும் தொழிலாளர் சந்தைகள் சீர்குலைந்து வருவது கவலையளிக்கிறது.  ரஷ்ய இராணுவம் இந்த போரை மேலும் தொடர்ந்தால் … Read more

விமானிக்கு உடல் நலக்குறைவு – திடீர் விமானியான பயணி

அமெரிக்காவில் சிறிய ரக விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், இதுவரை பறக்கும் அனுபவமே இல்லாத பயணி ஒருவர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பஹாமாஸில் உள்ள மார்ஷ் துறைமுகத்தில் உள்ள லியோனார்ட் எம். தாம்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2 பயணிகளுடன் புறப்பட்ட செஸ்னா 208 கேரவன் விமானம் , புளோரிடாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செயலற்று கிடந்துள்ளார். இதனையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த … Read more

இலங்கையில் நெருக்கடியை தீர்க்க ரனில் விக்ரமசிங்கே பிரதமராக வாய்ப்பு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போராட்டம் தீவிரமாகி தற்போது வன்முறை, அரசியல் நெருக்கடி என அந்நாட்டில் பரபரப்பான சூழல்கள் அரங்கேறி வருகின்றன. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி கடந்த மாதம் 9-ந்தேதி மக்கள் போராட்டத்தை தொடங்கினர். அதிபர் மாளிகை முன்பு உள்ள காலி திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இலங்கை … Read more

பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் ‘சீட்’ விற்று தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்த 8 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் இடங்களை காஷ்மீர் மாணவர்களுக்கு விற்று, அந்தப் பணத்தை தீவிரவாதத்துக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் 8 பேர் மீது என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்களை அந்நாடு ஒதுக்கியுள்ளது. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு ஹுரியத் மாநாடு அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எம்பிபிஎஸ் இடங்களை பணக்கார மாணவர்களுக்கு விற்று அந்தப் … Read more

வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று.. முழு ஊரடங்கை அமல்படுத்த அதிபர் கிம் ஜாங் உன்..!

வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்படாமல் வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் தொடர்ந்த நிலையில், தற்போது பியோங்யாங் நகரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களிலும் முழு ஊரடங்கை … Read more

விமான பயணத்தில் இனி மாஸ்க் கட்டாயமில்லை: ஐரோப்பா ஒன்றியம் அறிவிப்பு

பிரஸ்ஸல்ஸ் : கொரோனா பரவல் தொடங்கி கிட்ட இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்புகள் உலகம் எங்கும் படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் விமான நிலையங்களிலும், விமானங்களிலும் மாஸ்க் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பா முழுவதும் பொது போக்குவரத்தில் கொரோனா எதிர்ப்பு கொள்கைகளை மாற்றியமைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றிய ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சி … Read more

கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை வேண்டும் – வளர்ந்த நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: மேற்கு ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில், ஐ.நா. சார்பில் பாலைவனமயமாதலை தடுப்பது தொடர்பான கருத்தரங்கின் 15-வது அமர்வு (காப் 15) கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று முன்தினம் பேசியதாவது: இந்தியாவில் சீர்கேடு அடைந்துள்ள 2.6 கோடி ஹெக்டேர் நிலங்களை வரும் 2030-ம் ஆண்டுக்குள் சீரமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, மண் … Read more

வடகொரியாவில் ஒரே ஒரு கொரோனா தொற்று – நாடு முழுவதும் அவசரநிலை, ஊரடங்கு அறிவித்து அதிபர் உத்தரவு

பியோங்கியாங்: கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று இன்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக திவீரமாக உலக நாடுகள் தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வடகொரியா அரசு தனது நாட்டில் கொரோனா தொற்று இல்லை என மறுத்து வந்தது.  இந்நிலையில் தற்போது அந்நாட்டில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  … Read more

என் இதயம் நொறுங்கிவிட்டது: இலங்கை பாடகி வேதனை

மும்பை: ‘‘இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ என மும்பையில் உள்ள இலங்கை பாடகி யோகானி கூறியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், இலங்கைக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டி கொடுக்கும் திட்டத்தை அந்நாட்டு பாடகி யோகானி கடந்த மாதம் வெளியிட்டார். இதற்கு நிதியுதவி அளிக்கும்படி, தனது ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். … Read more

ஓடுதளத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான திபெத்திய விமானம்- பரபரப்பு வீடியோ

லாசா: சீனாவின் சாங்கிவிங் விமான நிலையத்தில் திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்றும் பறப்பதற்காக ஓடுதளத்தில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாங்கிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாசாவிற்கு செல்ல இருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்தில் 113 பயணிகளும், 9 விமான பணியாளர்களும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. ஒருசிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. According to … Read more