இலங்கையில் நீடிக்கும் பதற்றம்… ராணுவ ஆட்சி அமலாகிறதா?
இலங்கையில் 3ஆவது நாளாக நீடிக்கும் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்திடம் நிர்வாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. மூன்றாவது நாளாக நீடிக்கும் வன்முறையால் அரசு ஆதரவாளர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரின் வீடுகளும், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுச்சொத்துக்கள் பலவும் எரிந்து சேதமடைந்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாளை காலை வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, ராணுவம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறியும் போராட்டக்காரர்கள் போராட்டம் … Read more