21 கி.மீ. தூர நன்னீர் ஏரியை 71 வயதில் நீந்திக் கடந்து மூதாட்டி சாதனை

ஏற்கனவே கின்னஸ் சாதனைகளை படைத்த அமெரிக்காவின் 71 வயது மூதாட்டி, இஸ்ரேலில் உள்ள 21 கிலோ மீட்டர் தூர Sea of Galilee நன்னீர் ஏரியை மிக அதிக வயதில் நீந்தி கடந்தார். அமெரிக்காவின் Maine மாகாணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் பேட் காலென்ட் சாரெட்டி, இஸ்ரேலில் உள்ள Sea of Galilee நன்னீர் ஏரியை 8 மணி 22 நிமிடங்களில் கடந்தார். Sea of Galilee நன்னீர் ஏரியை மிக அதிக வயதில் கடந்த … Read more

இலங்கையில் போராடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடவில்லை- ராணுவம் மறுப்பு

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.  இதையடுத்து மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த … Read more

சீன அதிபருக்கு மூளையில் பாதிப்பு?| Dinamalar

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு, சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஷீ ஜிங்பிங்,68, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரை, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இதையடுத்து அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின. இந்தாண்டு இறுதியில், … Read more

‘‘நல்ல உடல்நலத்துடன் திரும்பும் வரை தனிமை’’- பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று

நியூயார்க்: பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் உலகம் முழுவதும் கரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக ஏழை நாடுகளுக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு மருந்து தயாரிப்பாளரான மெர்க்கின் ஆன்டிவைரல் கோவிட்-19 மாத்திரை … Read more

பாகிஸ்தானில் சர்க்கரை ஏற்றுமதிக்கு முழு தடை: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, சர்க்கரை ஏற்றுமதியை முழுமையாக தடை செய்து உத்தரவிட்டுள்ளேன். சர்க்கரை கடத்தல் மற்றும் பதுக்கலுக்கு எதிராக கடும் … Read more

சிறையில் கலவரம்: 44 கைதிகள் பலி| Dinamalar

குய்டோ : ஈக்வடார் சிறையில் ஏற்பட்ட பெரும் கலவரத்தில் 44 கைதிகள் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் வெடித்தது. இதில் 44 கைதிகள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.கலவரத்தைப் பயன்படுத்தி 220 கைதிகள் சிறையில் இருந்து தப்பினர். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தப்பி ஓடிய கைதிகளில் 112 பேர் பிடிபட்டனர்; 108 பேரை போலீஸ் படை … Read more

வன்முறையைக் கைவிட வேண்டும் என போராட்டக்காரர்களுக்கு இலங்கை அதிபர் வேண்டுகோள்

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் 3-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டி அதிபர் கோத்தபய உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் கொதித்தெழுந்த மக்கள், முன்னாள் பிரதமர் ராஜபக்ச, எம்.பி.க்கள், ஆளும்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களை அடித்து நொறுக்கியும், தீவைத்து கொளுத்தியும் வருகின்றனர். Tangalle-ல் இருந்த ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டான் ஆல்வின் ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தினர். … Read more

உக்ரைனில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமான மக்கள் உயிரிழப்பு- ஐநா அறிவிப்பு

கீவ்: உக்ரைன்  மீதான ரஷியா படையெடுப்பு 77-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் பொதுமக்களில் இதுவரை 3,381 போ் உயிரிழந்ததாக அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உக்ரைன் போரில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் உக்ரைன் விவகார கண்காணிப்புப் பிரிவு தலைவா் மாடில்டா பாக்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-  உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் … Read more

அர்ஜெண்டினாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. San Antonio de los Cobres நகருக்கு வடமேற்கே 87 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் … Read more

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் சுரங்க ரெயில் சேவை முடக்கம்: கட்டுப்பாடுகளால் மக்கள் விரக்தி

பீஜிங் : சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காய், இப்போது தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. 2.5 கோடி மக்கள் வாழ்கிற அந்த நகரில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த மாத மத்தியில் தினமும் 26 ஆயிரம் பேர் வரையில் தொற்று பரவியது. இப்போது தொடர் கட்டுப்பாடுகள் காரணமாக தினசரி பாதிப்பு 3 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 3 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. 6 பேர் … Read more