இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகளுக்கும், அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையில் வலுவான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.  கொழும்பு மற்றும் பிற நகரங்களில் நடந்த வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களில் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். ராஜபக்ச ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கவிழ்ந்தது. … Read more

உணவு பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்!

உக்ரைனின் ஒடேசா உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களை ரஷ்ய படைகள் முற்றுகையிட்டதால் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், உணவு நெருக்கடியை தவிர்க்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இரண்டாம் உலகப்போருக்கு பின் முதன்முறையாக ஒடேசா துறைமுகத்தில் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதாகவும் இது உக்ரைன் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார். இதனைத் தடுக்க உலக நாடுகள் தலையிட்டு, ரஷ்ய தடுப்புகளை நீக்க நடவடிக்கை … Read more

மகிந்த ராஜபக்சே மகள் யசோதா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

இலங்கையில் நேற்று இரவு போராட்டக்காரர்கள் ஆளும் அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளை குறி பார்த்து தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். கொழும்பில் உள்ள முக்கிய தலைவர்களின் வீடுகள் அனைத்தும் தாக்கப்பட்டன. இதனால் பாதுகாப்பு படையினர் இடையே கடுமையான திணறல் ஏற்பட்டது. கொழும்பில் பிரதமர் மாளிகை எதிரேயும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்து உள்ளனர். அவர்களால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் மகிந்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய அடுத்த சில … Read more

எலான் மஸ்க் டுவீட்டால் பரபரப்பு| Dinamalar

வாஷிங்டன் : ‘ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்து விட்டால்…’ என, உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், நேற்று சமூக வலைதளத்தில், ‘ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்து விட்டால்…’ என பதிவிட்டு இருந்தார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்து வருகிறார். இதையடுத்து … Read more

தென்கொரியாவின் புதிய அதிபராக கன்சர்வேட்டிவ் கட்சியின் யூன் சுக் பதவியேற்பு

தென்கொரியாவின் புதிய அதிபராக கன்சர்வேட்டிவ் கட்சியின் யூன் சுக் இயோல் பதவியேற்றுக்கொண்டார். கடந்த மார்ச்சில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டெமாக்ரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட மூன் – ஜே – இன் தோல்வியடைந்தார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட யூன் சுக் (Yoon suk) வெற்றி பெற்றதையடுத்து, சியோலில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இன்று பதவியேற்றுக்கொண்டார். அதிபருக்கான கடமைகளை உண்மையாக நிறைவேற்றுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட அவர், தேவைப்பட்டால் வட கொரியா மீது கடும் … Read more

தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்- விக்னேஸ்வரன் எம்.பி. அறிக்கை

கொழும்பு: யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: “அரசாங்கத்துக்கு சார்பாக அலரி மாளிகையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ் மக்கள் மீது கடந்த 65 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்துகின்றன. தமது உரிமைகளுக்கு எதிராக சாத்வீக வழியில் போராட்டம் மேற்கொண்ட தமிழ் மக்கள் மீது படையினரை ஏவி … Read more

தைவானில் நிலநடுக்கம்| Dinamalar

தைபே : தைவான் நாட்டில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்காசிய நாடான தைவானில் நேற்று கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் தைபேயில் கட்டடங்கள் குலுங்கின. ஆனால், சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.அதேபோல், தைவானில் இருந்து 108 கி.மீ., துாரத்தில் உள்ள யோனாகுனி தீவில் 70 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. தைபே : தைவான் நாட்டில் நேற்று நிலநடுக்கம் … Read more

மலக் கழிவுகளை உண்ண வைக்கும் மதபோதகரின் அதிரவைக்கும் பின்னணி

தாய்லாந்தில் தன்னுடைய மலக் கழிவுகளை தொண்டர்களை உண்ண வைக்கும் மதபோதகர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் சாயாஃபம் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டின் நடுவில் 74 வயதான தாவீ நன்லான் என்பவர் வசித்து வந்துள்ளார். உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் தான் தந்தை என அழைத்துக் கொள்ளும் அவருக்கும் குறிப்பிட்ட சில பின்தொடர்பாளர்கள் இருந்துள்ளனர். அவரை பின்தொடர்பவர்கள் அனைவரும் மதபோதகரின் சிறுநீர் மற்றும் கழிவுகளை சாப்பிட வேண்டும். கேட்பதற்கே கொடுமையாக இருக்கும் இந்த … Read more

ஈகுவடாரில் சிறைக் கைதிகளிடையே கலவரம், கத்திக்குத்து – 43 பேர் பலி

தென் அமெரிக்க நடான ஈகுவடாரில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம், கத்திக் குத்து சம்பவத்தில் 43 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். போதைக் கடத்தல் கும்பலின் தலைவன் சிறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து இரு கும்பலிடையே சண்டை ஏற்பட்டது. கைதிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டதில் 43 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் சிறையை உடைத்து தப்பினர். 112 கைதிகளை போலீசார் பிடித்த நிலையில் தலைமறைவான நூற்றுக்கும் மேற்பட்டோரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி வருகின்றனர். … Read more

ஈக்வடார் நாட்டில் சிறையில் பயங்கர கலவரம்: 43 கைதிகள் பலி

குய்டோ: தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. தலைநகர் குய்டோவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் சாண்டோ டொமிங்கோ டிலாஸ் கொலராடோசில் உள்ள பெல்லாவிஸ்டா சிறைச்சாலையில் கைதிகளின் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டன. இதனால் அங்கு பயங்கர கலவரம் வெடித்தது. இந்த மோதலில் 43 கைதிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். கலவரத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். … Read more