உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு துாதரகம் அறிவுரை| Dinamalar
கீவ்-ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், உக்ரைனை விட்டு வெளியேற, இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய துாதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. … Read more