சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர் நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்வு.! <!– சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர் நடத்திய பயங்கர குண்டுவ… –>

சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர் நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. Beledweyne நகரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான். இத்தாக்குதலுக்கு al Shabaab என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த 13பேரில் ஒருவர் அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆவார். இந்த தாக்குதலில் 18க்கும் மேற்பட்டவர்கள் … Read more

அதிரடி காட்டும் கனடா போலீஸ்: முடிவுக்கு வரும் போராட்டம்?| Dinamalar

ஒட்டாவா-வட அமெரிக்க நாடான கனடா தலைநகர் ஒட்டாவாவில், போலீசின் அதிரடி நடவடிக்கைகளால், அரசுக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவில், 32 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.கனடாவுக்குள் நுழையும்லாரி டிரைவர்கள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. … Read more

அமெரிக்காவில் இலவசமாக 40 கோடி N95 முகக்கவசங்கள் வழங்க திட்டம்

மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு சுமார் 40 கோடி N95 முகக்கவசங்கள் இலவசமாகக் கிடைக்கும் திட்டத்தை அதிபர் ஜோ பைடன் அறிமுகப்படுத்த உள்ளார். அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாகவே ஒமைக்ரான் காரணமாக கரோனா தொற்று தீவிர நிலையை அடைந்துள்ளது. நேற்று மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,702 பேர் பலியாகி உள்ளனர். 6 6 கோடிக்கு அதிகமானவர்கள் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் இலவசமாகக் கிடைக்கச் செய்யும் திட்டத்தை … Read more

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாளை மறுதினம் ரஷ்யா பயணம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரும் 23, 24-ம் தேதிகளில் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் பாகிஸ்தான் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் புதினை இம்ரான்கான் சந்தித்துப் பேசுகிறார். கடந்த 1999-ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இருந்தார். அதன்பிறகு இம்ரான்கான் செல்ல இருக்கிறார். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் இடையே போர் … Read more

2015 தொடங்கி 2021 வரை பூமியின் வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டுகள்: ஐ.நா. அறிக்கை

ஜெனீவா: 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2021 வரையிலான கடந்த 7 ஆண்டுகள்தான் இப்பூமியின் வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டுகளாக அறியப்படுவதாக (World Meteorological Organization) சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘State of Global Climate Report 2021’ எனும் பெயரில் இந்த அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இத்தனைக்கும் 2020 தொடங்கியே குளிர் நிகழ்வான லா நினா நிகழ்வு நிலவி வருகிறது. இந்த நிகழ்வின்போது சராசரி வெப்பநிலை குறைவாகவே இருக்கும். … Read more

கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் பரிசோதனை செய்வதற்கு அனுமதி – பாரத் பயோடெக் நிறுவனம் <!– கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் பரிசோதனை செய்வதற்கு … –>

கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் பரிசோதனை செய்வதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக அதனை தயாரக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் தரப்பரிசோதனை நடத்தக் கோரி விண்ணப்பம் அளித்திருந்தது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க பங்குதாரரான Ocugen நிறுவனமும் அமெரிக்காவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கு கோவாக்சினை உற்பத்தி செய்து விநியோகிக்க அனுமதி கோரியது. இந்நிலையில் பாரத் பயோடெக் விடுத்த அறிக்கையில் , கோவாக்சினை அமெரிக்காவில் கோவிட்டுக்கு எதிரான … Read more

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு

லண்டன்: சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நாட்டு தலைவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை இன்று உறுதிப்படுத்தி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வரும் வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து பணிகளை செய்வார் என அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ராணி 2ம் எலிசபெத் தன்னை … Read more

பிரிட்டன் ராணிக்கு கொரோனா தொற்று| Dinamalar

லண்டன்-ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 95, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோருக்கு இம்மாத துவக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; இருவரும் அரண்மனையிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், ராணிக்கு லேசான அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் வழக்கமான பணிகளில் அவர் ஈடுபடுவார் என பகிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது. … Read more

வலுக்கட்டாயமாக கரோனா வரவழைத்து இறந்த பாடகி: தடுப்பூசி எதிர்ப்பாளர்களை சாடும் மகன்

செக் குடியரசின் கிராமியப் பாடகர் ஹானா ஹோர்கா. கரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் அபாயகரமான பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே இருந்தார். இந்நிலையில், அண்மையில் அவர் தனக்கு வலுக்கட்டாயமாக கரோனா தொற்று ஏற்படும்படி செய்தார். கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில் உள்ள விடுதிகள், பார்கள், திரையரங்குகள், கலை நிகழ்ச்சிக் கூடாரங்களில் நுழைய இரண்டு டோஸ் தடுப்பூசி … Read more

'நான் செய்த மிகப்பெரிய தவறு!' – ஒப்புக் கொண்ட பிரதமர்!

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்ஃபை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தது தனது அரசு செய்த மிகப்பெரிய தவறு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக் கொண்டுள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நவாஸ் ஷெரிப்பால் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்று தனது அரசு கருதியதாகக் குறிப்பிட்டார். அவரை வெளிநாடு செல்ல அனுமதித்ததன் மூலம் தாங்கள் மிகப்பெரிய … Read more