கனடாவில் கல்லுாரிகள் மூடல் இந்திய மாணவர்கள் பாதிப்பு

ஒட்டவா:கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடப்பதால், கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா பரவலை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில், போராட்டம் நடந்து வருகிறது.கனடாவின் கியுபெக் மாகாணத்தில் உள்ள மூன்று கல்லுாரிகளில், இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். பல மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். போராட்டம் காரணமாக, இந்த கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் … Read more

பாரபட்சமின்றி தடுப்பூசி செலுத்தப்பட்டால் கரோனா உயிரிழப்புகளும், ஊரடங்குகளும் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிடும்: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

ஜெனீவா: “கரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படுவதும், மருத்துவமனைகளில் மக்கள் அனுமதிக்கப்படுவதும், ஊரடங்குகள் அமல் படுத்தப்படுவதும் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிடும்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ‘தடுப்பூசிகள் செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு’ என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் இந்தக் கருத்தரங்களில் பங்கேற்றனர். கருத்தரங்குக்கு தலைமை வகித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் மைக்கெல் ரியான் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்!

உள்ளூர் அளவில் ஊரடங்கை அறிவிக்க வேண்டாம் என, அனைத்து பிராந்திய நிர்வாகங்களுக்கு அரசு அறிவுரை வழங்கி உள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனா மட்டும் இன்னும் … Read more

நேபாளத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு <!– நேபாளத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தை கண்டித்… –>

நேபாளத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். நேபாளத்தில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்தடம் அமைக்கவும், சாலைகளை மேம்படுத்தவும் அமெரிக்க அரசு 3,700 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதன் மூலம் 80 சதவீத மக்கள் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது. இருந்தபோதும், இத்திட்டங்களை வழிநடத்தும் வாரியத்தில் நேபாள அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை என எதிர்கட்சியைனர் குற்றம்சாட்டியதால் போராட்டங்கள் வெடித்தன. போலீசார் தண்ணீரை … Read more

டிரம்ப் பேச்சால் பார்லி.,யில் வன்முறை: நீதிமன்றம் கருத்து| Dinamalar

வாஷிங்டன்:’டொனால்டு டிரம்பின் வார்த்தைகள், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லி., கட்டடத்திற்குள் நடந்த வன்முறைகளுக்கு வழிவகுத்திருக்கக்கூடும்’ என, அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.அமெரிக்காவில், 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், போராட்டங்களில் குதித்தனர். புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில தினங்களுக்கு முன், டிரம்ப் ஆதரவாளர்கள், ‘கேப்பிடோல்’ எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்திற்குள் நுழைந்து பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வன்முறை சம்பவத்திற்கு, டிரம்ப் … Read more

செல்போனை பார்த்தபடி மேல்தளத்தில் விழுந்தவர், கீழ்தளத்தில் எழுந்தார் – வைரலாகும் வீடியோ..!

இஸ்தான்புல், துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், ஊழியர்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்தில் உள்ள குடோனில் பொருட்களை அடுக்கி கொண்டிருந்தனர். கீழ் தளத்தில் பொருட்களை வைப்பதற்காக தளத்தின் தரையில் இருந்த சிறிய அடைப்பு பகுதியை திறந்து வைத்திருந்தனர். அப்போது அப்துல்லா மட் என்ற 19 வயது இளைஞர் செல்போனை பார்த்துக் கொண்டே வந்ததில் தரையில் திறந்து வைக்கப்பட்டிருந்த அடைப்பை கவனிக்கவில்லை. அருகில் இருந்த ஊழியரும் வேலை செய்வதில் கவனமாயிருந்ததால் அப்துல்லாவிடம் இதுகுறித்து சொல்லவில்லை. … Read more

கின்னஸ் உலக சாதனை படைத்த உலகின் வயதான மனிதர் 112 வயதில் காலமானார்

மாட்ரிட்: உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூன்டே நேற்று முன்தினம் தனது 112 -வது வயதில் காலமானார். ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள லியோன் நகரைச் சேர்ந்தவர் சாடர்னினோ டிலா ப்யூன்டே. இவரை உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. இவர் லியோன் நகருக்கு அருகில் உள்ள பியூன்டே காஸ்ட்ரோ என்ற இடத்தில் கடந்த 1909-ம் … Read more

இங்கிலாந்து ராணிக்கு கொரோனா – தனிமையில் இருப்பதாக தகவல்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு திரை, விளையாட்டு, பல்வேறு நாட்டு தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆளாகி வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளும் இந்த பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாயாரான ராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் பகுதியில் … Read more

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று உறுதி <!– இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று உறுதி –>

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ராணியின் அதிகாரப்பூர்வ இல்லமான பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் இதுகுறித்து விடுத்துள்ள செய்தி குறிப்பில், 95 வயதான ராணிக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இருதவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் ராணிக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மிக லேசான அறிகுறிகள் இருப்பதாலும், தமது கடமைகளில் எளிய பணிகளை ராணி தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராணியின் மூத்த மகனும், … Read more

உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேற தூதரகம் அறிவுரை

உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இன்று போர் தொடுக்கும், நாளை போர் தொடுக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து வருகிறார். பெரும்பாலான நாடுகள் தங்களுடைய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்த வண்ணம் உள்ளது. நாட்டு மக்களையும் வெளியேற அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் தங்குயிருப்பது கட்டாயமில்லை என கருதும் நபர்கள் … Read more