கொரோனா பரவல் எதிரொலி – ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் ஒத்திவைப்பு

ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால் ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் வரும் 6 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஹாங்காங் தலைவர் கேரி லாம் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரிப்புக்கு முழு ஊரடங்கு என்பது தீர்வல்ல. கொரோனா வைரஸ் … Read more

அணு ஆயுதங்களை வைத்து மிரட்ட போர் பயிற்சிகளில் இறங்கும் ரஷ்யா| Dinamalar

மாஸ்கோ:ரஷ்யா – உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்து, போர் பயிற்சிகளில் இன்று ஈடுபட உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு … Read more

ஊடுருவுகிறது ரஷ்யா; உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்: தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா உத்தரவு

வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா தமது படைகளை நிறுத்தியுள்ளதால், அங்குள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான படைகளைக் குவித்து வருகிறது. எல்லையில் பீரங்கிகள், ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனில் ஊடுருவதற்கான முயற்சியில் ரஷ்யா உள்ளது. எனவே, உக்ரைனிலுள்ள அமெரிக்க பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்முடிவை தற்போதே பரிசீலியுங்கள்” என்று … Read more

அடுத்த வாரம் பேச்சுவார்த்தை: ரஷ்யாவுக்கு கண்டிஷன் போட்ட அமெரிக்கா!

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த படைகள் குவிக்கப்பட்டன. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … Read more

கச்சதீவு திருவிழா – இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.! <!– கச்சதீவு திருவிழா – இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்கு அன… –>

இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புனித அந்தோனியார் தேவாலயத்தின் இந்த ஆண்டுக்கான திருவிழா இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் 500 பேர் மட்டும் பங்கேற்பது என்றும், தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் யாழ் மாவட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், தேவாலய திருவிழாவில் பாதிரியார்கள் மட்டும் பங்கேற்று … Read more

1,100 சொகுசு கார்கள் நாசமாயின| Dinamalar

பனாமா: அட்லாண்டிக் கடல்பகுதியில் மிகப்பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகின நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் துறைமுகத்திலிருந்து கடந்த பிப்.10-ம் தேதி பெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல், 22 மாலுமிகளுடன் அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கப்பலில் வோல்ஸ்வோகன், லம்போகிரினி, போர்ஷே, ஆடி உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு ரக கார்கள் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று அட்லாண்டிக் கடல் … Read more

அபுதாபியை தாக்க வந்த இரு ஏவுகணைகளை அழித்தோம்: ஐக்கிய அரபு அமீரகம்

அபுதாபி: ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவிய இரு ஏவுகணைகளை பதிலடி தாக்குதலில் அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், “தலைநகர் அபுதாபியை நோக்கி இன்று (திங்கட்கிழமை) ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வீசிய இரு ஏவுகணைகளை எங்கள் ராணுவம் தாக்கி அழித்தது. ஐக்கிய அரபு அமீரகம் எந்தவிதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. நாட்டை பாதுகாக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகம் எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் இயங்கும் … Read more

பிரிட்டனை புரட்டிப் போட்ட யூனிஸ் புயல்… எவ்வளவு வேகம்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வரும் பிரிட்டனை இயற்கை சீற்றம் தற்போது ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டுள்ளது. யூனிஸ் புயல்தான் தற்போது பிரிட்டனில் துயரமாக கருதப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான புயலாக யூனிஸ் உள்ளதாக வானிலை ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் வைட் தீவை மணிக்கு 122 மைல் வேகத்தில் தாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, பிரிட்டனில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. … Read more

உலகின் அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழமென கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது இஸ்ரேல் விவசாயியின் ஸ்ட்ராபெர்ரி <!– உலகின் அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழமென கின்னஸ் சாதனை பு… –>

இஸ்ரேல் விவசாயி விளைவித்த ஸ்ட்ராபெர்ரி பழம் உலகின் அதிக எடைகொண்ட பழமென கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 289 கிராம் எடையுள்ள எலன் வகை ஸ்ட்ராபெர்ரி பழம் சாதாரணமாக விளையக்கூடிய பழங்களை விட ஐந்து மடங்கு எடையுடன் விளைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானை சேர்ந்த விவசாயி விளைவித்த 250 கிராம் எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழமே இதற்கு முன் உலகின் அதிக எடை கொண்ட பழமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து இஸ்ரேல் விவசாயியின் … Read more

ஊரடங்கை கைவிட வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

ஜெனீவா:  உலக அளவில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஒமைக்ரான் பரவல் அதிகரித்தாலும் இதனால் பலி எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதால் பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வைரஸ் தாக்கம் இன்னும் முழுவதுமாக உலகை விட்டு நீங்கவில்லை. எனவே உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் … Read more