அர்ஜென்டினாவில் பற்றி எரியும் காட்டுத்தீ… 5.18 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து சாம்பல் <!– அர்ஜென்டினாவில் பற்றி எரியும் காட்டுத்தீ… 5.18 லட்சம் ஹ… –>

வடக்கு அர்ஜென்டினாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் எரிந்து சாம்பலாகின. கொரியன்டெஸில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ அதிவேகமாகப் பரவத் துவங்கியது. இதனால் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் எரிந்து போயின. இது அப்பகுதியில் உள்ள மொத்த நிலப்பரப்பின் 6 சதவீதம் ஆகும். வறண்ட கால நிலையின் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க பல தீயணைப்பு வீரர்கள் போராடி … Read more

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பில்கேட்ஸ் சந்திப்பு

இஸ்லாமாபாத் : உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இஸ்லாமாபாத்தில் அவர் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் அரசைப் பாராட்டினார். பில்கேட்சுக்கு இம்ரான்கான் மதிய விருந்து அளித்து கவுரவித்தார். பில் கேட்ஸ், வறுமை ஒழிப்புக்காகவும், மக்களின் ஆரோக்கியம் காக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ‘ஹிலால் இ பாகிஸ்தான்’ விருது … Read more

புதிய டெல்டக்ரான் வைரஸ்: பிரிட்டனில் பாதிப்பு அறிகுறி| Dinamalar

லண்டன் : பிரிட்டனில், கொரோனா வைரசின் உருமாறிய, ‘டெல்டக்ரான் வைரஸ்’ பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்வதாக, பிரிட்டன் சுகாதார துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய ‘டெல்டா’ வைரஸ், இந்தியா உட்படஉலகளவில் இரண்டாவது அலையாக பரவி, பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கொரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ், மூன்றாவது அலையாக பரவி உலகை வாட்டி வருகிறது. இந்நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் கள் இணைந்த, ‘டெல்டக்ரான்’ எனும் உருமாறிய கொரோனா வைரஸ், … Read more

Travel to Mars: பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணம்! சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பம்

பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணித்தை சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பமானது சிவப்பு கிரகத்திற்கான பயண நேரத்தை வெகுவாக குறைக்கிறது. ஆச்சரியமாக இருந்தாலும் இது சாத்தியமாகும் உண்மை என்று உறுதியளிக்கின்றனர் விஞ்ஞானிகள். 45 நாட்களுக்குள் செவ்வாய் கிரகத்தை அடைவது இப்போது சாத்தியமாகும், இது நீண்ட நாட்களாக அறிவியல் ஆர்வலர்களின் கனவாக இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  கனடா நாட்டைச் சேர்ந்த எஞ்சினியர்களின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தை அடைவதற்கான லேசர் அடிப்படையிலான தொழில்நுட்பம் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும். தற்போதைய நிலவரப்படி … Read more

சிரியாவில் ஐ.எஸ் – குர்து படையினர் மோதலில் 123 பேர் பலி

சிரியாவில் குர்து படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடத்த மோதலில் 123 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பிரிட்டனில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “குர்து கட்டுபாட்டில் உள்ள ஹசாகா நகரில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள குவேரன் சிறைச்சாலை மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் குர்து படையினருக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. ஐ.எஸ் … Read more

பிரேசில் நாட்டில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113 ஆக உயர்வு <!– பிரேசில் நாட்டில் பெய்த கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை … –>

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மொரோ டா ஆஃபிசினாவில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன. காணாமல் போன 116 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். Source link

பிரேசில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.   இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் … Read more

சர்வதேச தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதை அம்பலப்படுத்திய சவுதி பெண் ஆர்வலர்| Dinamalar

வாஷிங்டன்: மென்பொருள் வாயிலாக சர்வதேச தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதை, சவுதி அரேபிய பெண் ஆர்வலர் அம்பலப்படுத்தியது எப்படி என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், சமூக ஆர்வலரான லுாஜெய்ன் அல் ஹத்லுால் என்பவர், பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு, இவரின் ‘மொபைல்போன்’ முடக்கப்பட்டதால் வெளியான தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், அதுகுறித்த முழு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. லுாஜெய்ன் அல் ஹத்லுாலின், ஐபோனில் கடந்த ஆண்டு … Read more

பிரேக்த்ரூ தொற்றால் உடலில் வலுவான ஆன்டிபாடி உருவாகிறது: ஆய்வில் தகவல்

கரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவதை பிரேக்த்ரூ தொற்று என மருத்துவ உலகில் கூறப்படுகிறது. ஆனால், இந்த பிரேக்த்ரூ தொற்று ஏற்படுபவர்களுக்கு உடலில் வலுவான ஆன்டிபாடி உருவாகிறது எனக் கூறுகிறது ஓர் ஆய்வறிக்கை. ஜர்னல் செல் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை பிரசுரமாகியுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்களே இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். கரோனா ஒரிஜினல் வைரஸைவிட டெல்டா, ஒமைக்ரான் திரிபுகள் அதிகமான பரவும் தன்மையும், எதிர்ப்பாற்றலை மீறி தாக்கும் திறனும் … Read more

ரஷ்யா உக்ரைன் விவகாரம் – பதற்றத்திற்கு நடுவில் போலந்து சென்றார் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

வார்சா: உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை நம்ப மறுக்கின்றன. அதேசமயம் உக்ரைனுக்கு நேட்டோ படைகள் ஆதரவு தெரிவித்து வருவதால், அங்கு தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, பெல்ஜியம், போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அமெரிக்க  பாதுகாப்பு செயலாளர் லாயிட் … Read more