விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம்: ஆப்கன் வெளியுறவு அமைச்சர்

விரைவில் சர்வதேச அங்கீகரம் பெறுவோம் என்று ஆப்கனில் ஆட்சி செய்யும் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை … Read more

ஜிம்பாப்வே நாட்டில் 90 சதவீத ஆசிரியர்கள் இடை நீக்கம்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக  அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.  பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு கல்வி அமைச்சகம் கடந்த வியாழன் அன்று எச்சரித்திருந்தது. எனினும் போராட்டம் தொடரும் நிலையில், பொதுப் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 1, 40,000 பேரில் 1,35,000 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 90 சதவீத ஆசிரியர்களை அரசு இடை நீக்கம் … Read more

அமெரிக்க படையால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் – அபு இப்ராஹிம் அல் குரேஷி யார்?

வாஷிங்டன்: பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி நேற்று இரவு கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பைடன், “நேற்றிரவு எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நன்றி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷியை கொன்றுள்ளோம். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் எல்லை மற்றும் … Read more

மாஸ்க்குக்கு பதில் இனி கோஸ்க்?- தென் கொரியாவில் அறிமுகம்

சியோல்: தென் கொரியாவில் கரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து பரவிய கரோனா, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உலகில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று அதன் வேற்றுருக்கள் அடுத்தடுத்து தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கரோனாவிலிருந்து நம்மை முழுவதுமாக காப்பது முகக்கவசமும், … Read more

கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை 2 சிறுத்தை பூனைகள் மீட்பு <!– கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த அரியவகை 2 சிறுத்தை பூனைக… –>

பாகிஸ்தானில் கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வந்த இரண்டு சிறுத்தை பூனைகள் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. பார்ப்பதற்கு சிறுத்தை குட்டி போல் இருக்கும் இந்த அரியவகை காட்டுப்பூனைகளை வீட்டில் வளர்ப்தற்கும், அவற்றின் ரோமங்களுக்காகவும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. கராச்சி நகரில் 85,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த சிறுத்தை பூனை ஜோடியை, வனத்துறையினர் மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி பின் மர்கலா மலைப்பகுதியில் விட்டனர். Source link

பிலிப்பைன்ஸ் மந்திரியுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்தது – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

மணிலா: இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்று பேசினார். அந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்றனர். இதையடுத்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்சங்கர் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு, அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி டியோடோரோ எல்.லாக்சின் ஜூனியரை சந்தித்துப் பேசினார். பிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை மந்திரி … Read more

ஒரு மாத பிளான், ஹெலிகாப்டர் அழிப்பு, மனித வெடிகுண்டு… ISIS தலைவர் அல் குரேஷியின் இறுதி நிமிடங்கள்

சிரியா: பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி, அமெரிக்க படைகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது இறந்துவிட்டார் என்று நேற்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஐஎஸ்ஐஎஸ் முன்னாள் தலைவர் அல் பாக்தாதி இறந்தபின்பு புதிய தலைவராக அல் குரேஷி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து அவரை அமெரிக்க கொல்லத் திட்டமிட்டுவந்தது. இந்தநிலையில்தான் மத்திய கிழக்கு நாடான சிரியாவின் அத்மே நகரில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் குடும்பத்துடன் வசித்துவந்த அவரை நேற்றுமுன்தினம் அமெரிக்க படைகள் … Read more

மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்த விரைவில் வருகிறது தடை?

மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் அளவுக்கு நோய்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. புதிது புதிதாக உருவாகிவரும் நோய்களை தீர்க்க மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் பயனாக தற்போது உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா போன்ற புதிய தொற்றுகள், நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடிக்கும்போது, அவை விற்பனைக்கு வருவதற்கு முன் முதலில் எலி, … Read more

சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை அனுப்பியதாக புகார் எழுந்தால் 2-5 ஆண்டுகள் வரை சிறை <!– சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை அனுப்பி… –>

மத்திய கிழக்கு நாடான சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை குறிக்கும் எமோஜீயை அனுப்பியதாக புகார் எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி, இந்த குற்றத்துக்கு 1 லட்சம் சவுதி ரியால் அபராத தொகையுடன் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் இத்தகைய ஆட்சேபனைக்குறிய குறியீடுகள் அனுப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் … Read more

போர் மூண்டால் உக்ரைன் அகதிகளை ஏற்க தயாராகும் போலந்து

வார்சா: ரஷியா – உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் கேட்டுக்கொண்டார். அதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று … Read more