ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக, புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் இருந்து கிழக்கு வடகிழக்கே 164 கிலோமீட்டர் தூதரத்தில் நேற்று இரவு 11.34 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 140 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் பொருள்சேதம், … Read more

குளிர்கால ஒலிம்பிக்கிற்கு பிறகு தாக்குதல்: மக்களை திரும்ப அழைக்கும் நாடுகள்!

உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருகிறது. இதனால், உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில் … Read more

காதலர் தினத்தை முன்னிட்டு ருசியான, இதயங்களை கரையச் செய்யும் சாக்லெட்டுகள் தயாரிக்கும் கலைஞர் <!– காதலர் தினத்தை முன்னிட்டு ருசியான, இதயங்களை கரையச் செய்யு… –>

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெல்ஜியத்தில் விருதுகள் பல பெற்ற சாக்லேட் தயாரிப்பாளரான பெர்னார்ட் ஸ்கோபன்ஸ் இதயங்களை கரையச் செய்யும் புதிய காரம், ராஸ்பெரி, உலர் பழங்கள் நிறைந்த ருசியான இனிப்பான சாக்லெட்டுகளைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஈஸ்டர் நெருங்கும் நிலையில் காதலும் காற்றில் தவழ்கிறது. இதில் தனது தனித்திறமையைக் காட்டும் ஸ்கோபென்ஸ், மிகச்சிறந்த சாக்லெட் தயாரிப்பவர் என்று பிரான்ஸ் விடுதியில் 4 ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் பல விருதுகளைக் … Read more

ஆப்கனில் 2 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் விடுதலை| Dinamalar

காபூல்: ஆப்கானிஸ்தானில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். இந்நிலையில், ஐ.நா., ஆணையத்தின்கீழ் பணியாற்றி வரும் இரண்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்களை, தலிபான் அமைப்பினர் கைது செய்து, காபூலில் உள்ள சிறையில் அடைத்தனர். அவர்களுடன், ஆப்கன் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்த தகவல் வெளிவந்ததும், பலரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். … Read more

சீனாவில் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

பீஜிங், உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.  … Read more

புகழ்பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ இயக்கிய புதிய படம் பெர்லின் திரைப்பட விழாவில் வெளியீடு <!– புகழ்பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ இயக்கிய பு… –>

இத்தாலியைச் சேர்ந்த புகழ் பெற்ற திகில் பட இயக்குனர் டாரியோ அர்ஜன்டோ இயக்கிய “Dark Glasses”, பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. முதுமை காரணமாக கடந்த பத்தாண்டுகளாக படம் எடுக்காமல் இருந்த அவர் 82 வயதில் இந்தப் புதிய படத்தை இயக்கியுள்ளார்.தம்முடைய சிறந்தப் படங்களில் இதுவும் ஒன்று என்கிறார் இயக்குனர் தமது மகளும் நடிகையுமான ஏசியா அர்ஜன்டினோவுடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்த அவர் படத்தில் நடித்த தனது மகள் தான் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியதாகக் … Read more

ஸ்பெயினில் கொடூரம் – குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன் கைது

மாட்ரிட்:  ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான அலிகாண்டேவில் இருந்து   20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.  15 வயது பள்ளி மாணவன் தேர்வில்  குறைவான மதிப்பெண் பெற்றது தொடர்பாக அவனது தாய் சத்தம் போட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் இருந்த வேட்டையாடும் துப்பாக்கியால் முதலில் தாயையும், பின்னர் தனது 10 வயது சகோதரரையும், தொடர்ந்து தனது தந்தையையும் அந்த சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான். தொடர்ந்து 3 … Read more

ரூ.26,000 கோடி ஒதுக்கீடு ஆப்கன் மக்கள் எதிர்ப்பு| Dinamalar

காபூல்-அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் குடும்பத்திற்கு, ஆப்கனுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் ஒதுக்கப்பட்டதை கண்டித்து, காபூலில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். கடந்த 2001 செப்., 11ல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், தெற்காசிய நாடான ஆப்கனில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி பின்லேடன் உத்தரவில் தகர்க்கப்பட்டது. இதையடுத்து, ஆப்கனுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியது.இந்நிலையில், முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து, இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் … Read more

ஜப்பான்: பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 5 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு

டோக்கியோ, ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உற்பத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலையில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் தொழிற்சாலை முழுவதிலும் பரவியது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர். ஆனாலும் சில … Read more

போர் மூளும் அபாயம்- உக்ரைனில் இருந்து ரஷ்யர்கள் வெளியேற்றம்| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்ற கிரெம்லின் வட்டாரம் திட்டமிட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனில் வசித்துவரும் தங்கள் நாட்டுக் குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்படும் அபாயம் உள்ளதால் ரஷ்யாவும் உக்ரைனில் உள்ள தங்களது நாட்டு பிரதிநிதிகளை மீண்டும் மாஸ்கோவுக்கு திரும்ப அழைத்துக் … Read more