இந்தியாவுக்கு அபாயம் காத்திருக்கு.. சீனா வாலாட்டப் போகிறது.. அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவின் பூகோள அமைப்பில் மாற்றங்கள் வரப் போகிறது. குறிப்பாக சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு பெரும் சவால்கள் காத்துள்ளன என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதே எச்சரிக்கையைத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கொடுத்து வருகிறார். எல்லைப் பகுதியில் சீனா பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. குடியிருப்புகளைக் கட்டுகிறது, பாலம் கட்டுகிறது. ஆனால் இந்தியா கவலைப்படாமல் இருப்பதாக ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். சீனாவும், பாகிஸ்தானும்தான் இந்தியாவுக்கு அபாயகரமானவையாக உள்ளன. அதுகுறித்து இந்தியா தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரி … Read more

தொழில்நுட்பக் கோளாறால் டிவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கம்.. <!– தொழில்நுட்பக் கோளாறால் டிவிட்டர் கணக்குகள் திடீரென முடக்க… –>

டிவிட்டர் சமூக ஊடகம் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக டிவிட்டர் கணக்கில் பயனாளர்கள் பதிவிட இயலாத நிலை காணப்பட்டது. இப்பிரச்சினை உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும் நிலைமை சீராகி இயல்புக்கு வந்துவிட்டதாகவும் டிவிட்டரின் தொழில்நுட்பக் குழுவினர் அறிவித்துள்ளனர் Source link

2-வது மனைவியை விவாரத்து செய்த நாளில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 49 வயது அரசியல் பிரமுகர்

பாகிஸ்தானின் பிரபல கட்சியின் பிரமுகராக இருப்பவர் ஆமிர் லியாகத். இவருக்கு 49 வயதாகிறது. இவர் ஏற்கனவே, முதல் மனைவியை விவாரத்து செய்துவிட்டு 2-வது திருமணம் செய்திருந்தார். 2-வது மனைவி கடந்த புதன்கிழமை ஆமிர் லியாகத்திடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்தார். உடனடியாக, லியாகத் 18 வயதான இளம் பெண்ணை அன்றைய தினமே திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை அவர் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ள லியாகத், … Read more

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 பேர் படுகாயம் <!– ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக… –>

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட்கீஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் வாசல் அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. Source link

பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்

இஸ்லாமபாத் : பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இம்ரான்கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் அந்த நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் இம்ரான்கான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக … Read more

உலக அளவில் திடீரென முடங்கிய டுவிட்டர், யூடியூப் – பயனாளர்கள் அவதி…!

வாஷிங்டன், டுவிட்டர் மற்றும் யூடியூப் சமூகவலைதளங்களில் முன்னோடியாக உள்ளது. இந்த இணையதள பக்கங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போது கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடங்கின. இதனால், டுவிட்டர் மற்றும் யூடியூபை பயன்படுத்தமுடியாமல் பயனாளர்கள் அவதியடைந்தனர். இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் டுவிட்டர், யூடியூப் சேவை முடங்கியது.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய டுவிட்டர், … Read more

உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை <!– உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு ஜோ … –>

உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள் என்று அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார், உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் பீரங்கி பயிற்சிகள், படைகள் குவிப்பு காரணமாக எந்நேரமும் படையெடுப்பு நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. போரைத் தவிர்க்க பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. உக்ரைனில் மீதமிருக்கும் அமெரிக்கர்கள் இப்போதே வெளியேற வேண்டும் என்றும், பிரச்னை விரைவில் மோசமடையக் கூடும் என்றும் பைடன் கூறியுள்ளார். ரஷ்யப் படையெடுப்பு ஏற்பட்டால் அமெரிக்கர்களைக் காப்பாற்ற அமெரிக்காவும் படைகளை அனுப்பினால் அது … Read more

ஆப்கானிஸ்தானின் நிலைமை அண்டை நாடுகளுக்கு கவலையளிக்கிறது: வெளியுறவுத் துறை இணை அமைச்சர்

புது டெல்லி,  ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை, அண்டை நாடுகளுக்கு கவலையை அளிப்பதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்தார். இதுகுறித்து மக்களவையில் அவர் கூறும்போது, மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. உச்சிமாநாட்டில், மனிதாபிமான உதவி, பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், பாதுகாப்பு உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் குறித்த பிரச்சினைகள் அண்டை நாடுகளுக்கு இயற்கையாகவே கவலையை அளிப்பதாக பல நாடுகளின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் … Read more

Quad 2022: வடகொரியா, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு குவாட் மாநாட்டில் மறைமுக எச்சரிக்கை!

மெல்பர்ன்: சுதந்திரமான மற்றும் சிறப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது குவாட் தலைவர்களின் மாநாடு. இந்தச் சந்திப்பில் வட கொரியாவுக்கு நேரடியாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு மறைமுகமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (2022, பிப்ரவரி 11) மெல்போர்னில் நடைபெற்ற குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டின் 4வது பதிப்பில், ​​இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.   எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், இந்தியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் … Read more

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு

வாஷிங்டன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்துள்ளது. இதனால்,உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.  இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசியதாவது: உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.உளவுத்துறை மூலம் … Read more