இளவரசர் சார்லஸ்க்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு

லண்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேற்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சுய தனிமைபடுத்தலில் உள்ளார்.  73 வயதான சார்லஸ், இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை.  சார்லஸ் முதல் தடவையாக 2020 ஆண்டு மார்ச் மாதம் … Read more

வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது நாசாவின் பார்க்கர் விண்கலம்| Dinamalar

வாஷிங்டன் :’நாசா’ எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், ‘பார்க்கர்’ விண்கலம், வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது.சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக, ‘பார்க்கர்’ விண்கலத்தை, நாசா 2018ல் விண்ணில் ஏவியது. இது 2025ல் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனுக்கு மிக அருகே வெள்ளி கிரகம் உள்ளது. இந்நிலையில், சூரியனை நெருங்கிக் கொண்டிருக்கும் பார்க்கர்விண்கலம் வெள்ளி கிரகத்தை கடக்கையில், அதன் மேற்புறத்தை ஏற்கனவேமூன்று முறை … Read more

சிக்னலை மதிக்காமல் சென்ற முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர்: காரை மறித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வாஷிங்டன், அமெரிக்காவின் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் கிரெக் ராபின்சன். இவர் கடந்த திங்களன்று அங்குள்ள கிழக்கு பேயூ ரோட்டில் காரில் வந்தபோது போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்றுள்ளார்.  இதனால், அவரது காரை மறித்த போலீஸ் அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது அதில் கோகோயின், கிராக் கோகோயின், ஆக்ஸிகோடோன், ஹைட்ரோகோடோன், சானாக்ஸ் மற்றும் மரிஜுவானா போன்ற போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து கிரெக் ராபின்சனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை செய்ததில், அவரிடம் … Read more

ஜெர்மனியில் மதுபோதையில் சாலையோரத்தில் நின்றிருந்த 31 கார்கள் இடித்து தள்ளிய சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து தீ விபத்து.! <!– ஜெர்மனியில் மதுபோதையில் சாலையோரத்தில் நின்றிருந்த 31 கார்… –>

ஜெர்மனியில் சாலையோரம் நின்றிருந்த 31 கார்களை இடித்துத் தள்ளிய சரக்கு வாகனம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் புகுந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து தீ விபத்துக்குள்ளானது. சரக்கு வாகனம் ஏற்படுத்திய பெரும் விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மதுபோதையில் வாகனத்தை ஓட்டுநர் செலுத்தியதே பெரும் விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் இருந்த ஓட்டுநரை கைது செய்ததாகவும், சரக்கு வாகனம் துருக்கி நிறுவனத்தை சேர்ந்தது என்றும் தெரிவித்தனர். Source link

கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என மக்கள் அச்சப்பட்டனர். இதனால் முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை அகற்ற உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் … Read more

சீனாவிடம் இருந்து நவீன போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: சீனாவும், பாகிஸ்தானும் ராணுவ மற்றும் ஆயுத அமைப்புகளை மேம்படுத்த பல திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதில் ஜே.எப்.-17 தண்டர் போர் விமானமும் அடங்கும். சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த நவீன போர் விமானத்தின் புதிய ரகத்தை பாகிஸ்தான் அடுத்த மாத இறுதிக்குள் சீனாவிடம் இருந்து வாங்குகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் வான் பாதுகாப்பில் புதிய பலத்தை பெறும் என்று அந்நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஜே.எப்-17 தண்டர் … Read more

மடகாஸ்கரைத் தாக்கிய "பட்சிராய்" சூறாவளியால் 92 பேர் உயிரிழப்பு <!– மடகாஸ்கரைத் தாக்கிய &quot;பட்சிராய்&quot; சூறாவளியால் 92 பேர் உயிரி… –>

மடகாஸ்கர் தீவை தாக்கிய பட்சிராய் (Batsirai) சூறாவளியால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட அனா (Ana) சூறாவளியால் 55 பேர் உயரிழந்து, ஒரு லட்சத்து 30,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது தாக்கிய பட்சிராய் (Batsirai) சூறாவளியால் 91,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கியும், இடிபாடுகளில் சிக்கியும் இதுவரை 92 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட இகோங்கோ (Ikongo) மாநிலத்தில் மட்டும் 60 பேர் உயிரிழந்தனர். Source … Read more

பிலிப்பைன்ஸில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி

உலகளவில் கொரோனா மற்றும் அதன் மாறுபாடான ஒமைக்ரான் உள்ளிட்ட தொற்றுகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு பயணிககளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நிலையில், கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. சமீப நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருதால், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாடு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு … Read more

சாலை முற்றுகைகளும், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை: ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டாவா: சாலை முற்றுகைகள், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் முதலானவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாலை முற்றுகைகள், சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது நாட்டின் வணிகம் மற்றும் ஏற்றுமதியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். நாம் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கரோனா தொற்றை, சாலைத் தடுப்புகளால் முடிவுக்கு கொண்டு வர முடியாது. அறிவியலால் மட்டுமே கரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று … Read more

அமெரிக்கப் படைத்தளங்களை தாக்கும் திறன்கொண்ட ஏவுகணையை சோதித்தது ஈரான் <!– அமெரிக்கப் படைத்தளங்களை தாக்கும் திறன்கொண்ட ஏவுகணையை சோதி… –>

ஈரான் அருகில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேலைத் தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. கைபர் பஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை 900 மைல் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைபர் பஸ்டர், ஏவுகணை தடுப்பு அமைப்புகளையும் மீறி தாக்கும் தன்மை கொண்டது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரானிடம் 20 வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாக தகவல்கள் … Read more