உலக மக்கள் தொகையில் பாதி பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் – சுகாதார பாதுகாப்பிற்கான ஐரோப்பிய கமிஷனர் <!– உலக மக்கள் தொகையில் பாதி பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்த… –>

உலக மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக உணவு, மற்றும் சுகாதார பாதுகாப்பிற்கான ஐரோப்பிய கமிஷனர் Stella Kyriakides தெரிவித்துள்ளார். பிரான்சில் நடந்த உலக சுகாதாரத் துறையினர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், உலகளாவிய தடுப்பூசி பிரசாரத்தை அதிகரிக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். ஐரோப்பாவில் 1 புள்ளி 7 பில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, ஏறத்தாழ 165 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மற்ற நாடுகளை விட ஆப்பிரிக்காவில் தடுப்பூசி … Read more

ஜப்பான் இளவரசிக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி

டோக்கியோ : ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோ. 38 வயதான இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த யாகோவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

சிறுமிக்கு கல்லீரல் தானம்; இந்திய வம்சாவளி இளைஞருக்கு விருது| Dinamalar

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் சக்தி பாலன் பாலதண்டாயுதம், உயிருக்கு போராடிய ஒரு வயது சிறுமிக்கு கல்லீரல் தானம் செய்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. தெற்காசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய இளம் தம்பதியருக்கு, 2019ல் பிறந்த மகள் ரியா. பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு கல்லீரலில் அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.குழந்தைக்கு ஒரு வயதான நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக கல்லீரல் தானம் வழங்கும்படி … Read more

இங்கிலாந்தில் 1.80 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு…!

லண்டன், இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 68,214 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,00,119  ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 276 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 55 … Read more

பாலஸ்தீனத்தில் கொரோனா பரவல் உச்சம் – பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் <!– பாலஸ்தீனத்தில் கொரோனா பரவல் உச்சம் – பல்வேறு கட்டுப்பாடுக… –>

பாலஸ்தீனத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 300 என்ற எண்ணிக்கையில் பரவல் தற்போது 64 ஆயிரமாக அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. காஸா, வெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் அதிகளவிலான பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையங்களை அரசு திறந்துள்ளது. Source … Read more

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 110 பேருக்கு பாதிப்பு உறுதி

பெய்ஜிங், உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.  … Read more

ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பின் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர் – உலக சுகாதார அமைப்பு <!– ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பின் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர் -… –>

ஒமைக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது முதல் இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒமைக்ரான் வேறுபாடு குறித்து அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 13 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுளது. டெல்டா மாறுபாடை விட ஒமைக்ரான் வீரியம் குறைந்து காணப்படுவதாகவும், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் திறன் தடுப்பூசிக்கு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் 5 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது சோகத்திற்கு அப்பாற்பட்டது என உலக … Read more

அண்டை நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் – ஐ.நா.வில் இந்தியா புகார்

நியூயார்க்: ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ஆப்கானிஸ்தானில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையால் அதன் சுற்றுப்புறத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2008 ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் 2016 ல் பதான்கோட்டில் பயங்கரவாதச் செயல்கள் உட்பட எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதலினால் ஏற்படும் மனித இழப்பை இந்தியா நன்கு அறிந்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட … Read more

பிரிட்டனில் எரிவாயு விலை வரலாறு காணாத உயர்வு| Dinamalar

லண்டன் : பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டதை அடுத்து, எரிவாயுவிற்கான தேவை அதிகரிப்பால், அதன் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தொழில் துறை முடங்கியது. தேவை மற்றும் சப்ளை குறைந்தது.இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டதை அடுத்து, மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறைகளில் எரிவாயு பயன்பாடு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, … Read more

ரஷ்யாவில் புதிதாக 1,83,103 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாஸ்கோ, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.  இதுவரை உலக அளவில் 40.24 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 57.86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி … Read more