ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு – ஐந்து நாள் மீட்பு முயற்சி தோல்வியில் முடிந்தது

இகரா: மொராக்கோவின்  வடக்கு பகுதியில்  இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான்.  உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் … Read more

மன்ஹாட்டனில் காந்தி சிலை சேதம்; அமெரிக்க போலீஸார் விசாரணை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மன்ஹாட்டன்: அமெரிக்காவின் மன்ஹாட்டனில் காந்தி சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க போலீஸார் விசாரணை மேற்கொள்கின்றனர். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரின் அருகே உள்ள யூனியன் ஸ்கொயர் பகுதியில் எட்டு அடி உயர மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து இந்திய-அமெரிக்க தூதரகங்கள் இடையே இச்செய்தி மிகப் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இதுகுறித்து … Read more

அமெரிக்கர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஜோபைடன் அழைப்பு

அமெரிக்காவில் கொரோனா ஆதிக்கம் அமெரிக்க வல்லரசு நாட்டில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 8 லட்சத்துக்கும் அதிகமான ஒருநாள் பாதிப்புகளுடன் உச்சத்தை தொட்ட ஜனவரி மத்தியில் இருந்து, அங்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் பேர் இந்த தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் 49 மாகாணங்களில் தொற்று சற்றே குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 35 மாகாணங்களில் இறப்பு அதிகம் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, … Read more

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் வலியுறுத்தல்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனுக்கு அருகிலுள்ள யூனியன் சதுக்கத்தில்  8 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு இந்திய தூரகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நாசகார செயலை தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது என்று நியூயார்க் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. காந்தி சிலை … Read more

அமெரிக்க ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவம் பயிற்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் யவோரிவ்;ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக, அமெரிக்கா அனுப்பிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவத்தினர் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைனை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ அணியில் சேர்க்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து உக்ரைன் எல்லையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் … Read more

குளிர்கால ஒலிம்பிக் போட்டி: உக்ரைன் அணியின் தொடக்க விழாவில் தூங்கிய புதின்…!

பிஜீங், சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கவிழாவை யொட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் வண்ணமிகு வாண வேடிக்கைகடன் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை மிக உயரமான 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பலர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.  இந்தநிலையில், பெய்ஜிங் … Read more

மெட்டா நிறுவன பங்குகள் வீழ்ச்சி – உலக பணக்காரர்கள் பட்டியலில் 13-வது இடத்துக்கு இறங்கிய மார்க் ஜக்கர்பெர்க்! <!– மெட்டா நிறுவன பங்குகள் வீழ்ச்சி – உலக பணக்காரர்கள் பட்டிய… –>

மெட்டா நிறுவன பங்குகள் தொடர் விலை வீழ்ச்சியால் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் வரிசையில் 13-வது இடத்தை பிடித்தார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயனர்கள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 26 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதனால் 82 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜக்கர்பெக் 13-வது இடத்திற்கு பின்தங்கினார். 91 புள்ளி 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் … Read more

உலகை வென்றது இளம் இந்தியா; ஜூனியர் கிரிக்கெட் பைனலில் வெற்றி

ஆன்டிகுவா: ஜூனியர் உலக கோப்பை பைனலில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது இந்தியா. நேற்று நடந்த பைனலில் இங்கிலாந்தை 4 விக்கெட்டில் வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீசில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 14வது சீசன் நடந்தது. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் பிரஸ்ட், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ராஜ் அசத்தல் இங்கிலாந்து அணிக்கு ஜார்ஜ் … Read more

நியூயார்க்கில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மன்ஹட்டன்  ஒற்றுமை சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் 8 அடி  உயர முழு வெண்க சிலை உள்ளது. கடந்த 1986- ஆம் ஆண்டு காந்தியின் 117-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளையால் இந்த சிலை வழங்கபட்டது.  மகாத்மா காந்தியின் இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிகாரிகள் கவனத்துக்கும் இந்த விவாகரத்தை … Read more

"தவிக்க விட்டு சுற்றுலா சென்ற கணவர்.".. விரக்தியில் தனது கணவரை ஏலத்தில் விற்க விளம்பரம் கொடுத்த மனைவி..நியூசிலாந்தில் ருசீகரம்! <!– &quot;தவிக்க விட்டு சுற்றுலா சென்ற கணவர்.&quot;.. விரக்தியில் தனது … –>

நியூசிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவரை ஏலத்தில் விற்க விளம்பரம் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னையும், குழந்தைகளையும் 2 நாட்கள் தனியாக வீட்டில் விட்டுவிட்டு, நண்பர்களுடன் கணவர் மீன் பிடிக்க சென்றுவிட்ட கோபத்தில், லிண்டா மெக் அலிஸ்டர் என்ற அந்த பெண் ஆன்லைனில் தனது கணவரை விற்பனை செய்ய இருப்பதாக, அவரின் உயரம், கணவருக்கு பிடித்தவற்றையை குறிப்பிட்டு விளம்பரம் வெளியிட்டிருந்தார். லிண்டாவின் இந்த விளையாட்டுப்பதிவை உண்மை என நம்பி 12 பெண்கள் ஜானை வாங்க … Read more