நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் பலி

காத்மண்டு, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து இன்று மதியம் 1.54 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு ரசுவா பகுதியை நோக்கி சென்றுள்ளது. எனினும், புறப்பட்ட 3 நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது. 9என்-ஏ.ஜே.டி. என்ற எண் கொண்ட ஏர் டைனஸ்டி வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஆனது, அந்நாட்டின் வடமேற்கே மலை பகுதியில் சென்றபோது, திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து உள்ளனர். நுவகோட் மாவட்டத்தில் சிவபுரி பகுதியில் வார்டு எண் … Read more

வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் தலைமையில் அமைகிறது இடைக்கால அரசு!

டாக்கா: நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை (வியாழன்) பதவியேற்கும் என்று வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்துள்ளார். இன்று (புதன்) செய்தியாளர்களைச் சந்தித்த வாக்கர்-உஸ்-ஜமான், ​​”இடைக்கால அரசு நாளை இரவு 8.00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது. இடைக்கால அரசின் ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருக்கலாம். நாடு முழுவதும் நிலைமை கணிசமாக மேம்பட்டு வருவதால், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இயல்பு நிலை திரும்பும். … Read more

“வங்கதேசத்தை புதிதாக கட்டமைக்க வேண்டும்” – விடுதலைக்குப் பின் கலிதா ஜியா உரை

டாக்கா: “வங்கதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை” என்று சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள வங்கதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் நயாபால்டனில் நடந்த வங்கதேச தேசிய கட்சியின் பேரணியில் காணொலி வாயிலாக கலிதா ஜியா உரையாற்றினார். 2018-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஆற்றிய முதல் பொது உரை இது. இந்த உரையில் அவர், “நான் இப்போது விடுவிக்கப்பட்டேன். சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதற்காக செய் அல்லது செத்து மடி எனும் போராட்டத்தில் ஈடுபட்ட துணிச்சலான … Read more

“கவனமுடன் இருங்கள்” – பிரிட்டன் வரும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

லண்டன்: பிரிட்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன் 3 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அங்கு இஸ்லாமியர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டம் ஆங்காங்கே வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் வரும் இந்தியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்கும்படி பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரிட்டனில் சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளதை இந்தியர்கள் அறிந்திருக்கக் கூடும். பிரிட்டன் நிலவரத்தை … Read more

வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா ‘தப்பியது’ முதல் ‘புகலிடம்’ வரை – மகன் சொல்வது என்ன?

இந்தியாவில் இருந்து அடுத்து எங்கு செல்வது என்பது குறித்து தனது அம்மா ஷேக் ஹசீனா இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு (Deutsche Welle) பேட்டி அளித்துள்ள ஜாய், “வங்கதேசத்தின் பிரதமராக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனது அம்மா. அவரும் அவரது குடும்பத்தினரும் யாருக்காக இவ்வளவு செய்தார்களோ, அந்த நபர்கள் தாக்குதலை நடத்துவார்கள் என்றும், அதன் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை … Read more

வங்கதேசத்தில் தலைமைக்கு வரும் முகமது யூனஸ்… யார் இவர்? – உடனே மாற்றம் வருமா?

Muhammad Yunus: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு தலைமை ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள முகமது யூனஸ் யார், அவரால் அங்கு அமைதியை திரும்ப வைக்க இயலுமா என்பது குறித்து இங்கு காணலாம்.

இலங்கை அதிபர் தேர்தல்: பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளராக ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிப்பு

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் 52 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய … Read more

இஸ்மாயில் ஹனியே கொலை; புதிய தலைவர் யார்? ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு

காசா முனை, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டது. ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் … Read more

ஷேக் ஹசீனா பதவி விலக காரணமான நஹித் இஸ்லாம் யார்?

டாக்கா: டாக்காவைச் சேர்ந்த சமூகவியல்மாணவர் நஹித் இஸ்லாம். வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தை இவர்தான் தலைமையேற்று ஒருங்கிணைத்துள்ளார். அவரின் போராட்டம் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வைத்துவிட்டது. 1998-ல் டாக்காவில் பிறந்த நஹித் திருமணமானவர். பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர்களின் முக்கிய போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நஹித். போராட்டத்தின் போதுநஹித் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து போராட்டம் கலவரமாக மாறியது. அதன் பிறகுதான் ஷேக் ஹசீனா பதவியிழந்து நாட்டை விட்டு வெளியேறினார். … Read more

லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள்… சத்தம் கேட்டு மக்கள் அலறியடித்து ஓட்டம்

பெய்ரூட், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்களில் 1,200-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் … Read more