ரஷ்யாவின் சைபர் தாக்குதலால் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையா?

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையின் பின்னணியில் ரஷ்யாவின் சைபர் தாக்குதல் இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. உலக அளவில் அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த … Read more

இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்

ஜெருசலேம், இஸ்ரேல்-காசா போர் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். எனவே செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படை உருவாக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே டிரோன் தாக்குதல் நடைபெற்றது. இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த … Read more

வங்கதேசத்தில் தொடரும் வன்முறை… 105 பேர் பலி… இந்தியா வந்த 300 மாணவர்கள் – என்ன பிரச்னை?

Bangladesh Protests: வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் எழுந்த கலவரத்தால், பதற்ற நிலை நீடிக்கும் நிலையில், அங்கிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். 

மைக்ரோசாப்ட் செயலிழப்பு: உலகம் முழுவதும் 1,400 விமான சேவை ரத்து

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தைவான், ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, அயர்லாந்து, துருக்கி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் யூனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விமான சேவைகளை … Read more

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற ஜோ பைடன்

வாஷிங்டன், அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கி உள்ளார். 81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன. ஜனாதிபதி தேர்தலையொட்டி டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் … Read more

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் கடும் பாதிப்பு

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன. ‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை … Read more

'தொழில்நுட்ப கோளாறு விரைவில் சீராகும் என நம்புகிறோம்' – மைக்ரோசாப்ட் நிறுவனம்

வாஷிங்டன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகம் முழுவதும் இன்று முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களின் கம்ப்யூட்டர் திரையில் புளூ ஸ்கிரீன் ஆப் டெத் (Blue Screen of Death) என்ற எரர் தோன்றியது. அதில், ‘உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக, விமான … Read more

வியட்நாமின் செல்வாக்கான கம்யூனிஸ்ட் தலைவர் நுயென் பு ட்ரோங் காலமானார்

ஹனோய்: வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், நாட்டின் செல்வாக்கு மிகுந்த தலைவருமான நுயென் பு ட்ரோங் காலமானார். அவருக்கு வயது 80. வியட்நாமின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், நாட்டின் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதியுமான நுயென் பு ட்ரோங் (Nguyen Phu Trong) பல மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகம் இன்று (ஜூலை 19) தெரிவித்தது. “கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங் ஜூலை … Read more

அமெரிக்க அதிபர் பைடனுக்கு கரோனா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று அறிவித்துது. இது குறித்து வெள்ளைமாளிகை செயலாளர் கரைன்ஜேன் பெரிவிடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: லாஸ் வேகாஸில் நடந்த தேர்தல்பிரச்சார நிகழ்ச்சியில் அதிபர் பைடன் நேற்று பங்கேற்றார். அதன்பின் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு நடத்திய கரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லோசான அறிகுறிகள் உள்ளன. அவரது சுவாசம் இயல்பு நிலையில் உள்ளது. உடல் வெப்ப நிலை, … Read more