இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் கைது

கொழும்பு, இலங்கையில் சமூக வலைதளங்களில் போலியான வாக்குறுதிகளை கொடுத்து, பொதுமக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று பின்னர் மோசடி செய்யும் கும்பல் குறித்து காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இலங்கையின் நெகொம்போ பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 13 பேரை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 57 மொபைல் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். இதைத் … Read more

சீனா செல்ல வேண்டாம்: தைவான் அரசாங்கம் எச்சரிக்கை

தைபே நகரம், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீனா மற்றும் … Read more

டிரம்ப் உடனான விவாதத்தில் திணறல்… அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை மாற்ற முயற்சி?

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன்(வயது 81) களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்(வயது 78) களமிறங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாத நிகழ்ச்சிகளின்போது வெளியுறவு … Read more

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலத்தில் எரிபொருள் கசிவு: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்

ஃபுளோரிடா: சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்வதில் 2 வாரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்கலத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சி ஜூலை 2-ம் தேதிக்குபின் மேற்கொள்ளப்படும் நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களைஅனுப்ப ‘ஸ்டார்லைனர்’ என்றகேப்சூல் விண்கலத்தை போயிங்நிறுவனம் தயாரித்தது. பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கடந்த 5-ம் தேதி … Read more

ஏமன் கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல்

சனா, ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதி அமைப்பினர், காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏமன் கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல் … Read more

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை. இது தொடர்பாக அமெரிக்கப் புவியியல் நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது நள்ளிரவு 12.,36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அட்டிகிபா (Atiquipa) மாகாணத்தில் இருந்து 8.8 கிலோ மீட்டர் (5.5 மைல்) … Read more

செயற்கை கோள்களின் ‘கல்லறை’… காலவதியான செயற்கை கோள்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன..!!

பூமியின் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் சுமார் 10 ஆயிரம் செயற்கைக்கோள்கள் செயல்படுகின்றன. அனைத்து செயற்கைக்கோள்களும் ஒரு நாள் அல்லது மற்றொரு நாள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேலை செய்வதை நிறுத்திவிடும்.

பணவீக்கம் முதல் வெளியுறவுக் கொள்கை வரை: பைடன் vs ட்ரம்ப் காரசார விவாதம்

அட்லாண்டா: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. வெள்ளை மாளிகையில் மீண்டும் அதிபர் அரியணையை அலங்கரிக்க ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் இன்று (வெள்ளிக்கிழமை) இருவரும் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். இதுதான் அதிபர் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு நடைபெறும் முதல் விவாத நிகழ்வு. இதனை சிஎன்என் ஊடக நிறுவனம் ஒருங்கிணைத்தது. இதில் … Read more

ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலி

மாஸ்கோ, ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் அவ்விரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து தங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. குறிப்பாக ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது. அப்படி சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப்பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுகின்றனர். … Read more

கடற்படை மாலுமி உயிரிழப்பு; இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு

கொழும்பு, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 24-ந்தேதி இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்து, அவர்களின் படகை பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கையின்போது இந்திய மீனவர்கள் தப்ப முயன்றதாகவும், அப்போது இலங்கை கடற்படை மாலுமி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீதும், எல்லை தாண்டி மீன் பிடித்தது மற்றும் இலங்கை கடற்படை … Read more