மத துவேஷம் செய்ததாக கொலை: 14 வயது சிறுவனைத் தேடும் போலீஸ் – பாகிஸ்தான் அதிர்ச்சி

பஞ்சாப்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் முஸ்லிம் மதத்தை துவேஷம் செய்ததாக 55 வயது நபரை 14 வயது சிறுவன் ஒருவர் கொலை செய்துள்ளார். இது அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்துள்ளது. கொல்லப்பட்டவர் 55 வயதான நசீர் ஹுசைன் ஷா. அவர் ஷியா என்ற இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்தவர். அந்த நாட்டில் இந்தப் பிரிவு சிறுபான்மையினர் பட்டியலில் உள்ளது. கொலை செய்த 14 வயது சிறுவனின் தந்தை, … Read more

பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை

வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு ஈடாக ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார். அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அங்கே அவர் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக் கொள்கிறார். யார் இந்த அசாஞ்ச்? ஆஸ்திரேலியாவைச் … Read more

சுறா கொடூர தாக்குதல்; பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் பட நடிகர் மரணம்

நியூயார்க், பிரபல நடிகர் ஜானி டெப் நடிப்பில் வெளியான படம் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்: ஆன் ஸ்டிரேஞ்சர் டைட்ஸ். இந்த படத்தில் அவருடன் நடித்தவர் தமயோ பெர்ரி (வயது 49). இவர் அலைசறுக்கு விளையாட்டில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதில், 8 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவர், புளூ கிரஷ் மற்றும் சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: புல் திராட்டில் ஆகிய படங்களிலும் வேடமேற்று நடித்துள்ளார். இதேபோன்று, நீரில் எவரேனும் தவறி விழுந்து விட்டால் அவரை நீந்தி சென்று, … Read more

இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரி காயம் – காரணம் என்ன?

லண்டன், இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இருந்து வருகிறார். இவருடைய சகோதரி, இளவரசி ஆனி (வயது 73). இந்நிலையில், கேட்கோம்ப் பார்க் எஸ்டேட்டில் இருந்தபோது, நடந்த சம்பவமொன்றில் இளவரசி ஆனிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். முழு அளவில் அவர் சிகிச்சை முடிந்து, குணமடைந்து திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், … Read more

மெக்காவில் வெப்ப அலைக்கு இதுவரை 1,301 பேர் பலி

மெக்கா, சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றனர். மெக்காவில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை வீசியது. இந்த வெப்ப அலைக்கு மொத்தம் 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா சுகாதாரத்துறை மந்திரி பஹத் பின் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 660 பேர் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தியர்கள் 98 பேரும், … Read more

இரவில் ஒன்றாக விளையாட்டு; மறுநாள் மனைவி சுட்டு கொலை, கணவர் தற்கொலை: அமெரிக்காவில் அதிர்ச்சி

வாஷிங்டன், அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் மனைவி, குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வந்தவர் ஆலின் ஜான்சன் (வயது 57). இவருடைய மனைவி கெரிலின் ஜான்சன் (வயது 52). இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் தங்களுடைய 32-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. ஜான்சன் அவருடைய மனைவி கெரிலினை சுட்டு கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கெரிலின், இசை பள்ளி ஒன்றில் 2 ஆண்டுகளாக ஆசிரியையாக … Read more

விண்வெளியில் இருந்து ராமர் பாலம்: ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம் வைரல்

லண்டன், விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா – இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா – இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்குத் தீவுப்பகுதியான ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. இந்த்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் – 2 செயற்கைக்கோள் புகைப்படம் … Read more

இஸ்ரேல் தாக்குதலில் காசாவின் அவசரகால சேவை இயக்குநர் உயிரிழப்பு

டெல் அவில்: காசா நகரில் உள்ள மருத்துவ கிளினிக்கில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் காசாவின் ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 37,626 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 86,098 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. … Read more

12வது முறையாக தந்தையான எலான் மஸ்க்! இது போதாதாம்..இன்னும் வேண்டுமாம்..

Latest News Elon Musk Becomes Father : எக்ஸ் தளத்தின் உரிமையாளரும், உலகின் பணக்கார தொழிலதிபருமான எலான் மஸ்கிற்கு 12வது குழந்தை பிறந்துள்ளது.   

“நியூராலிங்க் சிப்பினை ஹேக் செய்யலாம்”- மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் தகவல்

வாஷிங்டன்: எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவன சிப்பினை முதல் முதலாக தனது மூளையில் பொருத்திக் கொண்ட நோலண்ட் அர்பாக் எனும் நபர், அந்த சிப்பினை ஹேக் செய்யலாம் என தெரிவித்துள்ளார். அப்படி செய்வதன் மூலம் ஹேக்கர்கள் மூளையின் சிக்னல்கள் மற்றும் சில விவரங்களை பெறலாம் என தெரிவித்துள்ளார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 29 வயதான நோலண்ட், கடந்த ஜனவரியில் இந்த சிப்பை மூளையில் பொருத்திக் கொண்டார். இதன் மூலம் தன்னால் கணினியை இயக்க முடிகிறது என தெரிவித்தார். … Read more