40 இந்தியர்கள் உட்பட 49 உயிர்களை பறித்த குவைத் தீ விபத்துக்கான காரணம் என்ன?

குவைத் சிட்டி: குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடித்தக்கது. ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்த கட்டிடம் குவைத் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அலசும் போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் … Read more

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி

பெரூட், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 120 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் … Read more

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காங்கோ நாட்டின் மாய் – டோம்பே மாகாணத்தில் உள்ள குவா நதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் படகில் பயணம் செய்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் பெலிக்ஸ் ஷிசெகெடி தெரிவித்தார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் உண்மையான காரணங்களை விசாரிக்கவும்,எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் … Read more

குவைத்தில் தமிழர்கள் பணிபுரிந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 41 பேர் பலி

மங்காஃப்: குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததை குவைத் துணைப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். … Read more

குவைத் தீ விபத்து: தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!

Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி- கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வாஷிங்டன், அமெரிக்கா அதிபராக இருக்கும் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகளின் மீதான விசாரணை அந்நாட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. முதல் இரண்டு வழக்குகளில் … Read more

சிங்கப்பூர் சென்றபோது நடுவானில் குலுங்கிய விமானம்: காயம் அடைந்த பயணிகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

சிங்கப்பூர், இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த 21-ந் தேதி விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 211 பயணிகள் உள்பட 230 பேர் பயணம் செய்தனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் நடுவானில் குலுங்கியது. இதனையடுத்து அந்த விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் ஒரு பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு … Read more

வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் 3 பேர் பலி

ஹனோய், வியட்நாமின் ஹா ஜியாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். இதற்கிடையே வெள்ளப்பெருக்கால் சுமார் 2,500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. … Read more

ஜப்பானில் பெப்பர் ஸ்பிரே கண்ணில் பட்டதால் 30 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் இடைவேளையின்போது மாணவர்கள் வகுப்பறையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவர் தற்செயலாக நண்பர்கள் மீது பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தினார். இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அலறி துடித்தனர். இதனையடுத்து அந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு … Read more

அமெரிக்காவில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் அமைந்துள்ளது. படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த மார்ச் 26-ந் தேதி சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று அதன்மீது மோதியது. இதில் பாலம் உடைந்து ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்தன. மேலும் 6 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த பாலம் உடனடியாக மூடப்பட்டது. அதனை சரிசெய்யும் பணி 2 … Read more