விண்வெளி உபகரணங்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை

பீஜிங், விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தைவானுக்கு … Read more

“ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர்!” – பைடனின் அறிவுரையை ஏற்காத இஸ்ரேல் உறுதி

காசா: ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. காசா இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வரும்நிலையில், கடந்த மே 26 ஆம் தேதி ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக நாடுகளின் கவனம் ரஃபாவின் பக்கம் திரும்பியது. அண்மையில், ஸ்பெயின், … Read more

“சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கு சேதம்” – ட்ரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு

நியூயார்க்: அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார். “நாட்டின் முன்னாள் அதிபர் இதுபோன்ற விவகாரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்தே தெரிகிறது இந்த தீர்ப்பில் அரசியல் உந்துதல் உள்ளது என்று. இதே நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது அமெரிக்க சட்ட அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பெருத்த சேதமாக அமைந்துள்ளது” … Read more

செக்ஸிற்கு மறுத்த மனைவி! திருமணமான 12 நாட்களில் வெளிவந்த உண்மை..ஷாக்கான கணவன்

Latest News Indonesian Man Finds Out About His Wife : திருமணமான 12 நாட்கள் கழித்து, தான் திருமணம் செய்து கொண்ட பெண் குறித்த உண்மை அதிர்ந்து ஒருவர் அதிர்ந்து போயிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.   

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

நியூயார்க்: அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு நியூயார்க் ஜூரிகள் இதனை அறிவித்தனர். 77 வயதான ட்ரம்ப், கடந்த 2017 முதல் 2021 வரையில் அமெரிக்க நாட்டு அதிபராக இயங்கியவர். அவர் அந்த நாட்டின் 45-வது அதிபராக அறியப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் தற்போது மீண்டும் … Read more

பெண்கள் கடத்தல், பாலியல் அடிமை, கொலை… அமெரிக்காவை அதிர வைத்த சைக்கோ பாதிரியார்

பிலடெல்பியா, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரின் வடபகுதியில் வசித்து வந்தவர் கேரி ஹீத்னிக். ராணுவத்தில் வேலை செய்த அவருக்கு மனநல பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தன. எனினும், கவுரவத்துடன் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ராணுவத்தில் பணி செய்த அனுபவத்தில் அவருக்கு அரசு சார்பில் காசோலைகள் வழங்கப்பட்டன. புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, பங்கு சந்தையில் முதலீடு செய்து அவற்றை லட்சக்கணக்கான டாலர்களாக அவர் மாற்றினார். ஆடம்பர வீட்டுக்கு ஆசைப்படாத அவர், கேடில்லாக் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ரக கார்களை … Read more

இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம் – ஈரான் அரசு நிராகரிப்பு

டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ந்தேதி அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது, அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே அவரது ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஈரானின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை நிலவியதால், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் … Read more

ஈகுவடாரில் மலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 2 பேர் பலி

குயிட்டோ, தென் அமெரிக்கா நாடான ஈகுவடாரின் கடலோர நகரமான குவாயாகில் நகரில் இருந்து, எல் ஒரோ மாகாணம் சான்டா ரோசா நகர் நோக்கி சிறிய ரக விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமானி டேவிட் பரேனோ மற்றும் அகஸ்டோ வீரா, அட்லியன் யும்பாலா ஆகியோர் பயணம் செய்தனர். விமானம் சான்டா ரோசா நகரை நெருங்கிய போது திடீரென அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது. இதனால் … Read more

காசா போர் 2024 இறுதி வரை நீடிக்கலாம்: இஸ்ரேல் எச்சரிக்கை

காசா: காசா மீதான போர் இன்னும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கும் (இந்த ஆண்டு இறுதி வரை) என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 36,224 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், … Read more

அனைத்து கண்களும் ரபா மீதா..? அப்போது மட்டும் எங்கே இருந்தன..? இஸ்ரேல் பதிலடி

ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஹமாசை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது இல்லை என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்கிறது. காசாவின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில், கடைசி இலக்காக ரபா நகரை குறிவைத்துள்ளது. போர் காரணமாக இடம் பெயர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ரபா … Read more