2-வது நாளாக தைவான் எல்லையில் சீனா போர்ப்பயிற்சி

தைபே நகரம், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒரு அங்கம் என சீனா கருதுகிறது. எனவே தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. இதற்காக தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்தநிலையில் தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர்ப்பயிற்சிகளை நடத்தி உள்ளது. சீனாவின் இந்த … Read more

ரஷியாவில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும் இரண்டு ராணுவ அதிகாரிகள் கைது

மாஸ்கோ, ரஷியாவில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் பெரிய அளவில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அதிபர் புதின் 5-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த ஷெர்ஷி சோய்கு மாற்றப்பட்டார். பின்னர் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதன்படி கடந்த வாரம் ராணுவ தளபதி இவான் போபோவ் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. … Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு தென்கொரியா, சீனா, ஜப்பான் பங்கேற்கும் உச்சி மாநாடு

சியோல், தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகள் இடையேயான முத்தரப்பு உச்சி மாநாடு 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி அந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த சந்திப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் இந்த முத்தரப்பு உச்சி மாநாடு 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற உள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான முத்தரப்பு உச்சிமாநாடு தென்கொரியா தலைநகர் … Read more

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – 16 பேர் பலி

காசா, இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நீடித்து வரும்நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காசா முனையின் மேற்கு கரையில் எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள அல்-சக்ரா மசூதியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து சதி தீட்டி வருவதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த மசூதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்களை அனுப்பியும் சரமாரி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட … Read more

பப்புவா நியூ கினியா நாட்டில் பயங்கர நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் பலி

போர்ட் மோர்ஸ்பை: தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்பகுதி வாசிகள் அளித்த ஊடகப் பேட்டிகளில் 100க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். … Read more

மெக்சிகோவில் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் வரும் ஜூன் 2ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது, குடிமக்கள் இயக்கம் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெசின் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அமைப்புகள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி … Read more

தீவுகளைச் சுற்றி போர் பயிற்சி, எச்சரிக்கை… – தைவானை ‘மிரட்டும்’ சீனா

தைபே: தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், தைவானைச் சுற்றி இரண்டு நாள் (மே 23,24) ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளது. இதனை தைவான் கடுமையாக கண்டித்துள்ளது. சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் … Read more

மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து 9 பேர் உயிரிழப்பு, 50+ காயம்

மெக்சிகோ: மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மெக்சிகோவில் வரும் ஜூன் 2-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது, குடிமக்கள் … Read more

இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் – ரிஷி சுனக் அறிவிப்பு

லண்டன், இங்கிலாந்து நாட்டை பொறுத்தவரை அரசியலமைப்பு ரீதியாக 2025 ஜனவரிக்குள் அங்கு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் , இது தொடர்பாக பிரதமர் சுனக் இது 2024 இன் பிற்பகுதியில் நடைபெறும் என்று பலமுறை கூறியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் கேமரூன் அல்பேனியா பயணத்திலிருந்த நிலையில், திடீரென உடனே நாடு திரும்புமாறு அழைக்கப்பட்டார். அப்போதே தேர்தல் குறித்துதான் என்று ஊடகங்களில் செய்திகள் கசிய ஆரம்பித்தது. இது ஒருபுறம் எனில் இங்கிலாந்து பாதுகாப்புத்துறை மந்திரி கிராண்ட் … Read more

பாலியல் பலாத்கார காட்சி: டிரம்பின் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு

வாஷிங்டன், அமெரிக்கா முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் வாழ்க்கை சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் டிரம்ப் வேடத்தில் செபாஸ்டியன் ஸ்டான் நடித்து இருக்கிறார். அலி அப்பாஸி இயக்கி உள்ளார். இந்த படம் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தில் பெண்களை டிரம்ப் பலாத்காரம் செய்வது போன்ற அவதூறு காட்சிகள் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. குறிப்பாக தனது முதல் மனைவியான இவானாவை அவர் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற காட்சி … Read more