ரெய்சி மறைவை அடுத்து ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, அந்நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி நேற்று முன்தினம் (மே 19) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, 50 நாட்களுக்கு தற்காலிக அதிபராக அந்நாட்டின் முதல் துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் சையத் அலி காமேனி நியமித்தார். 50 நாட்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட … Read more

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி; காயம் 30

பாங்காக்: 211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் உடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் பயணித்துக் கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர் . இது விமான விபத்துகளில் மிகவும் அரிதானதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஓர் அரிதான சம்பவம். லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எங்கள் Boeing 777-300 ER ரக விமானம் … Read more

Singapore COVID-19 Cases: வேகமாக பரவும் கே.பி. 2.. ஊரடங்கு உத்தரவு குறித்து முக்கிய அப்டேட்

New Wave of Covid In Singapore: சிங்கப்பூரில் வேகமாக பரவும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய அறிவுரை.

இறந்து போன குட்டியை 3 மாதங்களாக சுமந்து வரும் சிம்பன்சி குரங்கு!

வாலேன்சியா: இறந்து போன தனது குட்டியை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தன் உடலோடு சுமந்து கொண்டுள்ளது சிம்பன்சி குரங்கு ஒன்று. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள பயோபார்க் உயிரியல் பூங்காவில் இந்த குரங்கு உள்ளது. அந்த சிம்பன்சி குரங்கின் பெயர் நடாலியா என அறியப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த சில நாட்களில் அந்த குட்டி இறந்துள்ளது. இருந்தும் அதனை விட்டுப் பிரிய மனம் இல்லாத நடாலியா, அப்போது முதலே அதை … Read more

மனித மூளையில் சிப்: 2-வது நபருக்கு பொருத்த ஒப்புதல் பெற்ற நியூராலிங்க்

சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியை அமெரிக்காவின் எஃப்.டி.ஏ, நியூராலிங்க் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதாக தகவல். நியூராலிங்கின் சிப்பை முதல் முறையாக மனிதரின் மூளையில் பொருத்தி உள்ளதாக தெரிவித்தது. அண்மையில் அந்த சிப்பை பொருத்திக் கொண்ட நோலண்ட் அர்பாக் எனும் நபர் அந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். “எல்லோரையும் போல என்னால் கணினியை இயக்க முடிகிறது” என … Read more

“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் பேசிய ஜோ பைடன், “காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அக்டோபர் 7ம் தேதி … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: இரங்கல் தெரிவித்த அமெரிக்கா

டெக்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (வயது 63), நேற்று முன்தினம் மேற்கு அஜர்பைஜானில் நடைபெற்ற அணைக்கட்டு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமிரப் டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும், இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் ஈரான் புறப்பட்டார். அந்த ஹெலிகாப்டர் நெக்ரானில் இருந்து 600 கி.மீ. தூரத்தில் ஈரான் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள வாசகான் மற்றும் ஜோல்பா இடையே மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென … Read more

ஈரானின் இடைக்கால அதிபராக முகமது முக்பர் நியமனம்

தெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி சென்றார். அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார். அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். வர்சகான் மற்றும் ஜோல்பா இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. இதையடுத்து … Read more

நான்காவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்

காத்மாண்டு, நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அரசில் அங்கம் … Read more

சிறை தண்டனை பெற்ற தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை – கோர்ட்டு உத்தரவு

கேப் டவுன், கடந்த 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர் ஜாக்கோப் ஸூமா. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், நீதித்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு ஜாக்கோப் ஸூமாவிற்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த சூழலில் தென்ஆப்பிரிக்காவில் வரும் 29-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிட 82 வயதான ஜாக்கோப் … Read more