ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் பலி: பலர் மாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பருவ மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை (மே 17) பெய்த பருவ மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இன்னும் … Read more

சிங்கப்பூரில் 25,900 பேருக்கு கரோனா பாதிப்பு: மாஸ்க் அணிய அறிவுறுத்தல்

புதுடெல்லி: சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து 25,900 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் பரவல் அதிகரித்து வருவதால், சிங்கப்பூர் மக்கள் அச்சமடைந்துள்ளர். சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை … Read more

தரத்தில் சந்தேகம்: இந்தியாவின் 4 மசாலா தயாரிப்புகளுக்கு நேபாளம் தடை

காத்மாண்டு: இந்தியாவின் 4 மசாலா தயாரிப்புகள் தரமற்றவை எனக் கூறி, அவற்றுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. எம்டிஎச் (MDH) நிறுவனத்தின் மெட்ராஸ் கறி பொடி, சாம்பார் மசாலா பொடி, மிக்ஸ்டு மசாலா கறி பவுடர் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் கறி மசாலா ஆகியவற்றுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு கலப்படம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் நான்கு மசாலா கலவை தயாரிப்புகள் வெள்ளிக்கிழமை (மே 17) முதல் தடை விதிக்கப்படுவதாக நேபாளத்தின் … Read more

கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் அறிவுரை

புதுடெல்லி / இஸ்லாமாபாத்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் வெடித்துள்ள கலவரத்தை ஒட்டி அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான் அறிவுரை வழங்கியுள்ளது. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டியே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் தத்தம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. கடந்த மே 13 ஆம் தேதி கிர்கிஸ்தான் – எகிப்து மாணவர்கள் இடையேயான மோதல் … Read more

அறிவியல் கண்காட்சி: ரோபோவுடன் கைகுலுக்கிய புதின்

பீஜிங், ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங் அவரை உற்சாகமாக வரவேற்றார். சுற்றுப்பயணத்தின் முதல்நாளில் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளில் பெரும் தலைவர்களும் கலந்து கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இந்தநிலையில் 2-ம் நாள் பயணமாக சீனாவின் வடக்கு மாகாணமான ஹெய்லாங்ஜியாங்கில் உள்ள ஹார்பின் நகருக்கு ரஷிய அதிபர் புதின் வருகை தந்தார். அங்கே அந்த மாகாணத்தின் உச்சத்தலைவர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் சீனா-ரஷியா சார்பில் … Read more

மது குடித்தபோது இளைஞருடன் வாக்குவாதம்: மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் – 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

சிசினோவ், கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மால்டோவா. அந்நாட்டின் உஷ்டியா கிராமத்தை சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்தார். இந்த மர்ம மரணம் குறித்து மூதாட்டியின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையை தொடங்கிய போலீசார் மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர். இந்த கொலையில் மூதாட்டியின் உறவினரான … Read more

விமானத்தில் இருந்து திடீரென விழுந்த ஊழியர்.. வைரலாகும் வீடியோ

ஜகார்த்தா: இந்தோனேசிய தலைநகர் ஜகாத்தா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. டிரான்ஸ்நுசா விமானத்தின் உள்ளே சென்று ஆய்வு செய்த விமான நிறுவன ஊழியர் ஒருவர், ஆய்வை முடித்துவிட்டு இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள், இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை அங்கிருந்து அகற்றியுள்ளனர். அந்த ஊழியர் விமானத்தின் கதவை திறந்து படிக்கட்டில் கால் வைத்தபோது, படிக்கட்டு நகர்ந்ததால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி … Read more

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை தாக்கிய புயல் – 4 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில், நேற்றைய தினம் பலத்த புயல் காற்று வீசியது. இதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் நகரத்தின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் நின்ற மரங்கள் வேறோடு சரிந்தன. புயல் மற்றும் கனமழையால் மின்கம்பங்கள் சரிந்து பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் நேற்று இரவு சுமார் 9 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. இதனிடையே புயல் … Read more

யூத மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரிக்க முயன்ற நபர் சுட்டுக்கொலை – போலீசார் அதிரடி

பாரிஸ், பிரான்ஸ் நாட்டின் நாரமண்டி மாகாணத்தின் ரூவென் நகரில் யூத மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தை இன்று தீ வைத்து எரிக்க நபர் முயற்சித்துள்ளார். மத வழிபாட்டு தலம் அருகே இன்று அதிகாலை வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் மத வழிபாட்டு தலத்தின் வெளிப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து மத வழிபாட்டு தலத்திற்குள் வீசியுள்ளார். இந்த … Read more

உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு..பின்னணி என்ன?

Latest News UK Woman Death : பலருக்கு உடலுறவின் போது, சில விளையாட்டுகளை செய்யப்பிடிக்கும். அப்படி ஒரு விளையாட்டு ஒரு இளம் பெண்ணின் உயிரையே பறித்திருக்கிறது.