இந்தியாவின் தேசப்பற்று பாடல், சமோசா… ஜொலித்த அமெரிக்க வெள்ளை மாளிகை

வாஷிங்டன், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆசிய அமெரிக்கர்களின் பாரம்பரிய மாதத்திற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதனுடன், ஹவாய் மற்றும் பசிபிக் தீவு பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது. இந்த வருடாந்திர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்திய அமெரிக்கர்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தனர். இதில், இந்தியாவின் சாரே ஜகான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்ற பிரபல தேசப்பற்று பாடலை … Read more

வெள்ளை மாளிகை மீதான தாக்குதல் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையை குறிவைத்து கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மே 22-ம் தேதி இரவு வெள்ளை மாளிகை நோக்கி வேகமாக வந்த டிரக், எச் வீதி, வடமேற்கு மற்றும் 16-வது தெரு சந்திப்பில் வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவை சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதியது. பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த உலோகத் தடுப்புகள் மீது ஒருமுறை மோதிய பிறகு, அந்த டிரக் ரிவர்சில் வந்து மீண்டும் தடுப்புகள் மீது … Read more

காசாவில் தாக்குதல்; 3 இஸ்ரேல் வீரர்கள், 3 தொழிலாளர்கள் காயம்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. எல்லை வழியே உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது. இதில், இஸ்ரேலை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. 7 … Read more

PoK: பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்… திணறும் பாகிஸ்தான்..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் நடத்தும் வன்முறை போராட்டங்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது.

காசா மோதலில் ஐநா பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த இந்தியர் உயிரிழப்பு

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலா போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்தது. ரஃபாவில் அதிகளவில் பொதுமக்கள் வசிப்பதால் அங்கு தாக்குதல் … Read more

தவறை சுட்டிக்காட்டியவரை பதவி விலகச் சொன்ன நேபாளம்! பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி நேபாள் ராஜினாமா!

Currency Printing Controversy: இந்தியாவின் இடத்தை உரிமை கொண்டாடும் நேபாளத்தின் தவறை சுட்டிக்காட்டிய பொருளாதார ஆலோசகரை பதவி விலகிவைத்த அரசு…

விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்

முசாபர்பாத்: பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவரும் போராட்டம் நேற்று நான்காவது நாளை எட்டியது. கோதுமைமாவு விலைஉயர்வு, மின்கட்டண ஏற்றம் ஆகியவற்றை கண்டித்து அவாமி செயற்குழு தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் மக்கள் திரளாக ஈடுபட்டுள்ளனர். ஆரம்பத்தில் அமைதி வழியில் போராடி வந்தவர்களைக் கலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இறங்கினர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வன்முறை வெடித்தது. இதில் பாதுகாப்புபடை … Read more

நேபாளத்தில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா.. பிரதமர் பிரசண்டாவின் அரசுக்கு பின்னடைவு

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) கட்சியில் உட்கட்சி பிரச்சினை காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக, கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழுவினர் போர்க்கொடி தூக்கினர். பின்னர் இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தனர். தாய் கட்சியில் … Read more

2 மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்.. பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம், வேமவுத் நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்டு ஸ்லேமன் (வயது 62). இவரது சிறுநீரகம் செயலிழந்ததால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. உடல்நிலை படிப்படியாக தேறிய நிலையில், கடந்த மாதம் (ஏப்ரல்) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு … Read more

ராணுவ தலையீட்டை நிறுத்துக: அமெரிக்காவின் 7 நட்பு நாடுகளுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

பியாங்யாங், அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் ஆசிய பசிபிக் பகுதியில் ராணுவ தலையீட்டை உடனடியாக நிறுத்தி கொள்ளும்படி வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரலில், கொரிய தீபகற்ப பகுதியருகே கடல்வழி பகுதிகளில் தென்கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து கடந்த மாதம் அமெரிக்காவும் 2 நாட்கள் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது. இந்த மாத தொடக்கத்தில், … Read more