இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை- மாலத்தீவு மந்திரி

மாலே, மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு அதிபராக பதவியேற்றதில் இருந்தே இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறது மாலத்தீவு. இதனிடையே, தங்கள் நாட்டில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு உத்தரவிட்டது. இதன்படி, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில், இந்தியா வழங்கிய விமானத்தை இயக்கும் திறன் கொண்ட … Read more

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு சர்ச்சை: அதிபரின் பொருளாதார ஆலோசகர் விலகல்

காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய 100 ரூபாய் நோட்டு வரைபடத்தில் சர்ச்சைக்குரிய லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய இந்திய பகுதிகள் அடங்கிய வரைபடத்தை இணைத்து அச்சடிக்கிறது அந்த நாடு. அரசின் அந்த முடிவை அதிபர் ராம்சந்திர பவ்டெலின் பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவர் பதவி விலகி உள்ளார். “பொருளாதார நிபுணர் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் என்ற முறையில் புதிய 100 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் முடிவு குறித்து நான் எனது … Read more

பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழப்பு!

பாஸ்டன்: அமெரிக்க நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின் சிறுநீரக உறுப்பு உடலில் அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டது. 62 வயதான ரிக் ஸ்லேமேன் எனும் நபர்தான் உலகில் முதன்முதலாக பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரம் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் பன்றியின் சிறுநீரகத்தை … Read more

எங்கள் விமானிகளுக்கு இந்திய விமானங்களை இயக்கும் திறன் இல்லை… ஒப்புக் கொண்ட மாலத்தீவு!

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்தில் இல்லை என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்பு கொண்டுள்ளார்.

இஸ்ரேல் எங்களை அச்சுறுத்தினால் அணுகுண்டு தயாரிப்போம்: ஈரான் தலைவரின் ஆலோசகர் சூசகம்

டெஹ்ரான்: ‘‘ஈரானுக்கு இஸ்ரேலால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு குண்டு தயாரிப்பதை தவிர வேறு வழியில்லை’’ என ஈரான் தலைவர் அயோதுல்லா அலி கமேனேவின் ஆலோசகர் கமல் கர்ராசி தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தனர். ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ராணுவத்தினர் உதவி வந்தனர். இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் அமைந்துள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ராணுவத்தினர் தங்கியிருந்த கட்டிடம் மீது இஸ்ரேல் கடந்த மாதம் … Read more

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 37 பேர் பலி

ஜகர்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலர் வீடுகளை இழந்தனர். சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 37 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மீட்புப்பணியில் தேசிய பேரிடர் … Read more

மெக்சிகோவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

மெக்சிகோ சிட்டி, வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. அந்நாட்டின் ஷைபஸ் மாகாணத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. கவுதமாலா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ஷைபஸ் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினத்தந்தி Related Tags : Mexico  … Read more

லைசன்ஸ் கேட்ட காவலரிடம் சைலன்ட்டாக சட்டையை இறக்கி காண்பித்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

நியூயார்க், அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை ஒன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது, கார் ஒன்று வந்தது. அதனை காவலர் நிறுத்தினார். ஓட்டுநர் பகுதியில் இருந்த பெண்ணிடம் 45 கி.மீ. வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 65 கி.மீ. வேகத்தில் சென்றிருக்கிறீர்கள். உங்களுடைய வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த … Read more

கொரிய தீபகற்பத்தில் நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

பியாங்க்யாங், கொரிய தீபகற்பத்தில் தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளால் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகளை நடத்துகின்றது. இந்தநிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பியாங்க்யாங்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிய மல்டிபிள் ராக்கெட் ஏவுகணை சோதனையை வடகொரிய ராணுவம் நடத்தியது. வடகொரியாவின் இந்த சோதனை … Read more

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் நான்காவது இந்தியர் கைது.. கனடா நடவடிக்கை

இந்திய அரசால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (வயது 45), கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டான். கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இந்தியா-கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கனடாவின் குற்றச்சாட்டையும் இந்தியா நிராகரித்தது. இதற்கிடையே, பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் … Read more