காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறிவிட்டனர்: மாலத்தீவு

மாலே, மாலத்தீவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு வெற்றி பெற்றார். மாலத்தீவு அதிபராக பதவியேற்றது முதல் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போதே, மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் சிலர் இனவெறியுடன் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கும் … Read more

"இந்திய தேர்தலில் தலையிடவில்லை" – ரஷ்யா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு

வாஷிங்டன், அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும் எனக்கூறியிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது. இதனை நிராகரித்த மத்திய அரசு, இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யுஎஸ்சிஐஆர்எப் அமைப்பு தலையிட முயற்சி செய்வதாக பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்திரமற்ற … Read more

செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம் – 11 பேர் படுகாயம்

டக்கார், மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர் டக்காரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டது. போயிங் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 79 பயணிகள் உள்பட 85 பேர் இருந்தனர். ஆனால் ஓடுபாதையில் சென்ற அந்த விமானம் திடீரென தனது பாதையை விட்டு விலகி தாறுமாறாக ஓடியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து சிறிது தூரம் சென்ற அந்த விமானம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்துக்கு … Read more

பிரேசிலில் கனமழை: வெள்ளப்பெருக்கால் 1 லட்சம் வீடுகள் சேதம்

பிரேசிலியா, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 1 லட்சம் வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே அவர்கள் தங்குவதற்காக … Read more

நிலவில் ரயில் விட நாசா திட்டம்… ப்ளூ பீரிண்ட் ரெடி..!!

உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி பல்வேறு வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா இன்னும் ஒரு படி மேலே சென்று அங்கு ரயில்களை இயக்க விரும்புகிறது.

மரபணு சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் பெற்ற சிறுமி @ பிரிட்டன்

கேம்பிரிட்ஜ்: செவித்திறன் இல்லாமல் பிறந்த 18 மாத சிறுமி ஒருவருக்கு நவீன மரபணு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவர் செவித்திறன் பெற்றுள்ளார். இந்த சிகிச்சையின் மூலம் இயல்பானவர்கள் பெற்றுள்ள செவித்திறன் அளவுக்கு மிக நெருக்கமான நிலைக்கு அந்த சிறுமியின் செவித்திறன் செயல்பாடு அமைந்துள்ளதாக காது அறுவை சிகிச்சை நிபுணர் மனோகர் பான்ஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஒபல் சான்டி. பிறந்து 18 மாதமான அவருக்கு ஆடிட்டரி நியூரோபதி என்ற பாதிப்பின் காரணமாக காதில் இருந்து … Read more

“இந்திய தேர்தலில் தலையிடவில்லை” – ரஷ்யா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு

வாஷிங்டன்: தேர்தல் நேரத்தில் இந்தியாவை நிலைகுலையச் செய்ய முயற்சிப்பதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில், மதச்சுதந்திர விதிமுறை மீறல் குற்றச்சாட்டை சுமத்தி இந்தியாவை நிலைகுலைய செய்ய அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், … Read more

இந்தியாவை நிலைகுலைய செய்ய முயற்சி: அமெரிக்கா மீது ரஷ்ய வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு

மாஸ்கோ: ‘‘மதச்சுதந்திர விதிமுறை மீறல் குற்றச்சாட்டை சுமத்தி, தேர்தல் நேரத்தில் இந்தியாவை நிலைகுலைய செய்ய அமெரிக்கா முயற்சிக்கிறது’’ என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நடந்த முயற்சியின் பின்னணியில் இந்திய உளவுத்துறை ( ரா) இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் என்ற இதழில் செய்தி வெளியானது. குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய கூலிப்படையை நியமிக்க இந்திய தொழிலதிபர் நிகில் குப்தாவுக்கு இந்திய உளவுத்துறை (ரா) … Read more

பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: 7 தொழிலாளர்கள் பலி

கராச்சி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாடரில் இன்று அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து குவாடர் போலீஸ் நிலைய அதிகாரி மொஹ்சின் அலி கூறுகையில், பலுசிஸ்தான் மாகாணத்தின் சுர்பந்தர் பகுதியில் உள்ள குவாடர் துறைமுகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் … Read more

சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்.. ஒரு வாரமாக தேடும் போலீஸ்

சிகாகோ: அமெரிக்காவில் உயர் கல்வி படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படும் நிகழ்வு தொடர்கிறது. இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ரூபேஷ் சந்திர சிந்தாகிண்டியை கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை. என் ஷெரிடன் சாலையின் 4300 பிளாக்கில் இருந்து அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஒரு … Read more