சீனாவில் மருத்துவமனைக்குள் கத்தி தாக்குதல்: இருவர் உயிரிழப்பு, பலர் காயம்

ஜென்சாங்: சீன நாட்டில் உள்ள மருத்துவமனைக்குள் பதைபதைக்க வைக்கும் வகையிலான தாக்குதல் அரங்கேறியுள்ளது. தெற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜென்சாங் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கத்தியைக் கொண்டு ஒருவர் தாக்கியுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்துககுள் அரங்கேறிய வன்முறைச் சம்பவம் என இந்தத் தாக்குதல் குறித்த தகவலை சீன அரசு தரப்பு ஊடகம் உறுதி செய்துள்ளது. தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை … Read more

வாடகை தகராறை தடுக்க முயன்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் படுகொலை; சக மாணவர்கள் வெறிச்செயல்

புதுடெல்லி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் எம்.டெக் படித்து வந்தவர் நவ்ஜீத் சந்து (வயது 22). இந்தியாவை சேர்ந்தவரான சந்து, வாடகை தகராறில் ஈடுபட்ட இந்திய மாணவர்களை தடுக்க முற்பட்டபோது நடந்த தாக்குதலில் பலியானார். இதுபற்றி சந்துவின் மாமா கூறும்போது, சந்துவிடம் கார் இருந்தது. அதனால், வீட்டிலுள்ள தன்னுடைய உடைமைகளை எடுப்பதற்காக சந்துவின் காரில் அவருடைய நண்பர் சென்றிருக்கிறார். அந்த நண்பர் வீட்டின் உள்ளே சென்றதும், வெளியே சிலர் சத்தம் போட்டு, மோதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சத்தம் … Read more

Met Gala 2024 | கவர்ந்திழுக்கும் ஆடைகள் அணிந்து பிரபலங்கள் சங்கமித்த ஓர் ஃபேஷன் இரவு

நியூயார்க்: ஃபேஷன் ஆர்வலர்கள் சங்கமிக்கும் நிகழ்வாக அமைகிறது மெட் காலா. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிகழ்வுக்கு அவர்கள் அணிந்து வரும் ஆடை தான் பேசுபொருளாக அமையும். கடந்த 1948-ல் மெட் காலா தொடங்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் திங்கள்கிழமையின் இரவில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஃபேஷன் ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்பார்கள். அவர்கள் … Read more

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று (மே 7) காலை 8.04 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், தனது மூன்றாவது விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார். இந்தச் சூழலில் அவர் பயணிக்க இருந்த ‘போயிங் ஸ்டார்லைனர்’ விண்கலத்தின் பயணம் புறப்பாட்டுக்கு முன்னர் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் என இருவரும் பத்திரமாக வெளியேறினர். உயர் ரக … Read more

பனாமா அதிபர் தேர்தலில் ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி!

பனாமாவின் அதிபர் தேர்தலில் ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி பெற்றுள்ளார். அவர் முன்னாள் அதிபர் ரிக்கார்டோ மார்டினெல்லிக்கு மாற்றாக கடைசி நேரத்தில் ரியலைசிங் கோல்ஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 64 வயதான அவர் மொத்தமாக 34.35 சதவீத வாக்குகளை பெற்றார். தனது போட்டியாளரை காட்டிலும் 9 புள்ளிகள் முன்னிலை பெற்று வெற்றி வேட்பாளர் ஆனார். பண மோசடி விவகாரத்தில் 10 ஆண்டு காலம் ரிக்கார்டோ மார்டினெல்லி சிறை தண்டனை பெற்றார். அதன் காரணமாக தேர்தலில் அவரால் போட்டியிட … Read more

அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை – இஸ்ரேல் அதிரடி

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் … Read more

மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்; பெண் எம்.பி.க்கு இரவில் நடந்த கொடூரம்

குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எம்.பி. பிரிட்டானி லாவ்கா (வயது 37). சுகாதார துறைக்கான துணை மந்திரியாக பதவி வகிக்கும் லாகா, குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில், இரவில் பொழுதுபோக்க தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெளியே சென்றபோது, அவரை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன்பின் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த துயர செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், இந்த சம்பவம் … Read more

எதற்கு.. ஹமாஸ் மீண்டும் ராணுவ கட்டமைப்பை உருவாக்கவா..? போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சமீபத்தில் கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தனது குழுவை அனுப்பவில்லை என தெரிகிறது. இதனால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், ரபாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். … Read more

பிரேசிலில் கனமழை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

பிரேசிலியா, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரேசிலில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்பு … Read more

வெள்ளை மாளிகையை பரபரப்பாக்கிய விபத்து.. நுழைவு வாயில் மீது கார் மோதி டிரைவர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் வசிக்கக்கூடிய வெள்ளை மாளிகை பல அடுக்கு பாதுகாப்பு கொண்டது. வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுற்றுச்சுவரை ஒட்டி சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஒரு கார், திடீரென வெள்ளை மாளிகையின் நுழைவு வாயில் நோக்கி பாய்ந்து வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் அந்த கார், பாதுகாப்பு தடை மீது மோதி நொறுங்கியது. காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி … Read more