“இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை உபயோகிப்போம்” – இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்

டெஹ்ரான்: இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி அளித்த பேட்டியில், “ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். பிரதமர் நெதன்யாகுவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி, “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை … Read more

பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரை அடித்துக் கொன்றவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். பஞ்சாப் மாநிலம் டார்ன் டரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பிகிவின்ட் நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். விவசாயியான இவரை எல்லை தாண்டிச் சென்றதாகக் கூறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1990-ம் ஆண்டு கைது செய்தது. லாகூர் மற்றும் பைசலாபாத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த குண்டுவெடிப்பில் சரப்ஜித் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. … Read more

சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை சந்திக்க ஈரான் அனுமதி

புதுடெல்லி: ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்திருந்த சூழலில், இஸ்ரேலில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் முற்றியுள்ள சூழ்நிலையில் இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை கடந்த 13-ம் தேதி சிறைபிடித்தது. ஐக்கிய … Read more

ஈரான் – இஸ்ரேல் மோதலை தணிக்க வேண்டும்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர்

புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை தணிக்க வேண்டும் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம். இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் … Read more

ஹோட்டலில் மிஞ்சிப்போன உணவை சாப்பிட்டு… லட்சக்கணக்கில் பணத்தை சேமித்த ஐடியா மணி!

World Bizarre News: அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் உணவகத்தில் மீந்துபோகும் உணவை சாப்பிட்டே பல லட்ச ரூபாய்களை சேமித்துள்ளார். 

‘இன்னும் முடியவில்லை…’ – ஈரானுக்கான இஸ்ரேல் எச்சரிக்கையும், பின்புலமும்

டெல் அவிவ்: “ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவோம். தகுந்த நேரத்தில் ஈரான் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதால், இந்த மோதல் போக்கானது இப்போதைக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (ஞாயிறு) காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் … Read more

ஆப்கன் வெள்ளம்: 3 நாட்களில் 33 பேர் பலி, 606 வீடுகள் சேதம்!

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் 33 பேர் பலியாகினர்; 27 பேர் காயமடைந்துள்ளனர். 606 வீடுகள் சேதமடைந்தன. வெள்ளம், பூகம்பம், பனிச்சரிவு, நிலச்சரிவு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளுக்கு எதிராக மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. மேலும் பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று நாட்களாக … Read more

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு

காபூல், ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களில் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் தலிபான் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சைக் கூறுகையில், தலைநகர் காபூல் மற்றும் பல மாகாணங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த வெள்ளத்தால் சுமார் 800 ஹெக்டேர் … Read more

ஈரானுக்கு எதிரான பதிலடியில்… இஸ்ரேலுக்கு அமெரிக்கா மறைமுக உதவி

வாஷிங்டன், போரால் பல ஆண்டுகளாக பாதிப்படைந்த சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் நாட்டின் தூதரகம் ஒன்று உள்ளது. இதன் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்க அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதனால், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா … Read more

நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் – ஜோ பைடன்

வாஷிங்டன், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் இந்த மாத தொடக்கத்தில் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடும் கோபமடைந்தது. இந்த தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரைத்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈரான் நாட்டின் … Read more