ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடு பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் அங்கு பணவீக்கம் 25 சதவீதமாக உயரும் என்று கடன் மதிப்பீட்டு நிறுவனம் மெனிலா தெரிவித்துள்ளது. இதனால், ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது. விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய … Read more

தென்னாப்பிரிக்கா உள்பட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு தடை

கேப்டவுன், தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரைந்து வந்தனர். இந்தநிலையில் இந்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன. அதில் இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது. இதனால் அதை … Read more

இந்த உலகம் இன்னொரு போரை தாங்காது: ஈரான் – இஸ்ரேல் மோதலால் ஐ.நா. கவலை

ஜெனீவா: “மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார். முன்னதாக இஸ்ரேல் மீது ஈரான் நேற்று (ஞாயிறு) காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என … Read more

இஸ்ரேல் – ஈரான் போர்… தங்கம், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!

Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

சிறைபிடித்த கப்பலில் சிக்கியுள்ளவர்களை சந்திக்க இந்திய பிரதிநிதிக்கு விரைவில் அனுமதி: ஈரான் உறுதி

டெஹ்ரான்: ஈரான் சிறைபிடித்த கப்பலில் சிக்கியுள்ள 17 இந்திய மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு விரைவில் அனுமதி அளிப்பதாக ஈரான் உறுதி கூறியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீராப்தொல்லாயின் இதனை உறுதிப் படுத்தியுள்ளார். முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைபிடிப்பு பின்னணி: கடந்த 1-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் … Read more

இஸ்ரேல் மீது 5 மணி நேரம் 300 ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல்: 99% நடுவானில் இடைமறித்து அழிப்பு

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ஈரான் நேற்று காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து … Read more

ஈரான் சிறைபிடித்த கப்பலில் சிக்கியுள்ள 17 இந்திய மாலுமிகளை மீட்க இந்தியா பேச்சுவார்த்தை

புதுடெல்லி: நேற்று முன்தினம் ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் 17 இந்திய மாலுமிகள் உள்ள நிலையில், அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அவர்களை மீட்பது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ அதிகாரிகள் உட்பட … Read more

ரூ.42 கோடி பிணையத் தொகையை பெற்றுக்கொண்டு வங்கதேச சரக்கு கப்பலை விடுவித்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்

மொகதிசு: கடத்தப்பட்ட வங்கதேச சரக்கு கப்பலை, ரூ.42 கோடி பிணையத் தொகையை பெற்றுக் கொண்டு சோமாலிய கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த சரக்கு கப்பல் எம்.வி.அப்துல்லா. மொசாம்பிக் நாட்டில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கடந்த மாதம் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை சோமாலியா அருகே கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இந்த கப்பலை விடுவிப்பதற்கு, 5 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.42 கோடி) பேரம் பேசினர். மத்திய கிழக்கு பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் ஏவுகணை … Read more

கனடாவில் காருக்குள் வைத்து இந்திய மாணவர் சுட்டுக் கொலை

ஒட்டவா: கனடா நாட்டில் சிராக் அன்டில் என்ற இந்திய மாணவரை மர்ம நபர்களால் காருக்குள் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் தெற்கு வான்கூவர் நகரில், கிழக்கு 55வது அவென்யூவில் ஏப்ரல் 12ம் தேதி இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சோதனையிட்டனர். அதில், 24 வயதான சிராக் அன்டில் என்ற இந்திய மாணவர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ஆடி காருக்குள் … Read more

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

புதுடெல்லி: ஈரான் – இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் இந்திய தூதரகம் அவர்களை வலியுறுத்தியது. சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ளவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அவர்கள் … Read more