அடிடாஸ் ஷூவால் ஏற்பட்ட சிக்கல்… மன்னிப்பு கோரிய ரிஷி சுனக்!

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அணிந்திருந்த காலணி அவருக்கு சிக்கலை கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட ஷூ அணிந்தத்தற்காக அவர், கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார்.

வியட்நாமில் மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

ஹனோய்: வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம். நாட்டின் மிகப் பெரிய மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான அவருக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட வந்த அவர், அந்த நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2022-ல் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு வயது 67. சுமார் 12 பில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக … Read more

'கடவுள் துகள்' கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் மரணம்

லண்டன், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வானியல் மற்றும் தத்துவார்த்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் (வயது 94). வானியல் ஆராய்ச்சியில் இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. பெரு வெடிப்பின்போது அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைவதற்கு காரணியாக அமைந்த பொருளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூத்த விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார். ஆராய்ச்சி முடிவில் அணுக்களின் ஒட்டுப்பொருளானது 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ் கண்டுபிடித்தார். அது ‘ஹிக்ஸ் போசன்’ … Read more

ஈரானை நேரடியாக தாக்குவோம்.. இஸ்ரேல் மிரட்டல்

ஜெருசலேம்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. இப்போது இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (லெபனான்) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதவிர ஏமனின் ஹவுதி கிளர்ச்சி குழு மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுவும் இஸ்ரேலை குறிவைக்கின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் … Read more

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு

காசா, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது இதையடுத்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு … Read more

50 ரூபாய் மட்டுமே மிச்சம்.. மரணப் படுக்கையில் இருந்த தந்தையை ஏமாற்றி ரூ.5 கோடியை சுருட்டிய மகன்

லண்டன்: இங்கிலாந்தின் நோர்போக் மாவட்டம் அட்டில்பரோ பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பிக்கெல் (வயது 58). முன்னாள் ராணுவ வீரர். இவரது தந்தை பீட்டர் பிக்கெல் கடந்த 2015ம் ஆண்டு முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது நினைவாற்றல் குறைந்த நிலையில் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளார். அவர் கிட்டத்தட்ட மரணப் படுக்கையில் இருந்ததால், அவரது வீடு மற்றும் நிதிகளை நிர்வகிக்கும் சட்டப்பூர்வ அதிகாரத்தை மகனான டேவிட் பிக்கெல் பெற்றிருக்கிறார். இந்த அதிகாரத்தை பயன்படுத்தி டேவிட் … Read more

உலகின் வயதான மனிதர் பெருவில் வாழ்கிறார்: 1900-ம் ஆண்டில் வாழ்ந்தவர்

லிமா: பெரு நாட்டில் 1900-ம் ஆண்டு பிறந்த மார்சிலினோ அபாட் உலகின் மிகவும் வயதான நபராக நம்பப்படுகிறார். மார்சிலினோ அபாட், மத்திய பெருவின் ஹுவானுகோ நகரில் பிறந்தவர். தாவரங்கள் மற்றும்விலங்கினங்கள் சூழ்ந்து காணப்படும் இயற்கை சூழல்நிறைந்த அப்பகுதியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகாணப்படுகிறது. இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பிறந்துள்ளதை ஆவணங்கள் மூலம் பெருவியன் அதிகாரிகள் கடந்த 2019-ம்ஆண்டில்தான் உறுதிப்படுத்தியுள்ளனர். தன்னுடைய 124-வது பிறந்த நாளை அடையாளப்படுத்தும் மெழுகுவர்த்தி மற்றும் தனது உருவத்தில் செய்யப்பட்ட மாதிரி … Read more

காசா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. … Read more

“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்கிறார்” – காசா விவகாரத்தில் பைடன் அதிருப்தி

டெல் அவில்: இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7, 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேலிய தாக்குதல்களில் தற்போது வரை 33,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். அதோடு, உள்ளூர் சுகாதார அமைச்சகத்தின்படி, கிட்டத்தட்ட 23 லட்சம் … Read more

ஆப்கனில் இந்துக்கள், சீக்கியர்களின் சொத்துகளை மீட்டு ஒப்படைக்கிறது தலிபான் அரசு!

காபூல்: தலிபான் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொத்துகளை மீட்டெடுக்கும் பணி தொடங்க உள்ளது. அதற்கான பணியை அந்த நாட்டில் நீதி அமைச்சகம் மேற்கொள்கிறது. தலிபான் அரசு இதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். இந்தச் சூழலில் இந்த … Read more