சீன வெளியுறவு மந்திரி வாங் யி உடன் ரஷிய வெளியுறவு மந்திரி சந்திப்பு

பீஜிங், சீன வெளியுறவு மந்திரி வாங் யி அழைப்பை ஏற்று, ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரவ் சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். அவர் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். சீன-ரஷிய தூதரக உறவுகளின் 75-வது ஆண்டை முன்னிட்டு இரு தரப்பினரும் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொள்வார்கள். இருதரப்பு உறவுகளில் வளர்ச்சிக்கான நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்பது, வெவ்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது ஆகியவை பற்றி பேசப்படும் என பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, சீன வெளியுறவு … Read more

கனடா: இந்திய வம்சாவளி தொழிலதிபர் உள்பட 2 பேர் சுட்டு கொலை

ஒட்டாவா, கனடா நாட்டின் தெற்கு எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் மக்கள் சிலர் திரளாக கூடியிருந்தனர். அப்போது வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து தென்மேற்கு பிரிவின் ரோந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். இதில், காயமடைந்து கிடந்த 3 ஆண்களை மீட்டனர். அவர்களில் 49 மற்றும் 57 வயதுடைய 2 பேர் உயிரிழந்து விட்டனர். 51 … Read more

ஒரே மாதிரியான லாட்டரிச் சீட்டு: அமெரிக்க தம்பதிக்கு ரூ.17 கோடி பரிசு

மேரிலாண்ட்: அமெரிக்காவில் மேரிலாண்டில் உள்ள அனபோலிஸ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினர் பவர்பால் குலுக்கலில் பங்கேற்றுள்ளனர். அப்போது, இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே மாதிரியான 2 லாட்டரி சீட்டுகளை தேர்வு செய்து வாங்கியுள்ளனர். இதையடுத்து நடத்தப்பட்ட குலுக்கலில், அந்த தம்பதிக்கு தலா ஒரு லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு என்ற வகையில் 2 மில்லியன் டாலர் (ரூ.17 கோடி) பரிசு கிடைத்துள்ளது. முதலில் கணவன் தான் வாங்கிய லாட்டரிக்குத்தான் பரிசு கிடைத்துள்ளதாக நினைத்தார். பின்னர், … Read more

‘பிரேசில் அரசின் கைது அச்சுறுத்தலில் எக்ஸ் தள ஊழியர்கள்’ – எலான் மஸ்க்

சான் பிரான்சிஸ்கோ: பிரேசில் நாட்டில் பணிபுரிந்து வரும் எக்ஸ் சமூக வலைதள நிறுவனத்தின் ஊழியர்கள் கைது அச்சுறுத்துலுக்கு ஆளாகி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். போலிச் செய்திகளை பரப்புதல் மற்றும் நீதிக்கு இடையூறு செய்ததாகக் சொல்லி அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரேசில் அரசு எக்ஸ் தளத்தில் வலதுசாரி ஆதரவு கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக … Read more

பொய் சொன்னவருக்கு 80 கசையடி… பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பாகிஸ்தானின் கராச்சி நீதிமன்றம்  சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தனது முன்னாள் மனைவியின் நடத்தை குறித்து  பொய்யாகக் குற்றம் சாட்டி, குழந்தையை ஏற்க மறுத்தத்தற்காக 80 கசையடி தண்டனை கொடுத்துள்ளது.

அமெரிக்கா | காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு – 2024ல் 11-வது சம்பவம் இது!

ஓஹியோ: ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்துல் அர்பத் என்பவர் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக முகமது அப்துல் அர்பத் காணாமல் போன நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 25 வயதான அர்பத்தின் உடல் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் மீட்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகமும் அவரது மரணத்தை உறுதி செய்துள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எக்ஸ் பக்கத்தில், “முகமது அப்துல் அர்பத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் இறந்து கிடந்தார் … Read more

ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

மாஸ்கோ, ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஓர்க்ஸ் நகரில் உள்ள ஒரு அணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. எனவே அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் … Read more

அமெரிக்காவில் நடுவானில் விமான என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால் பரபரப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து ஹூஸ்டனுக்கு போயிங் 737 விமானம் ஒன்று புறப்பட்டது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பின்னர் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் என்ஜின் அருகே தடுப்பாக இருக்கும் தகடு பிய்ந்து காற்றில் பறந்தது. இதுகுறித்து விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த விமானம் டென்வர் விமான நிலையத்துக்கே திரும்பி தரையிறங்கியது. அதில் இருந்த … Read more

பாகிஸ்தானில் மனைவி மீது பொய் குற்றச்சாட்டு கூறியவருக்கு 80 கசையடி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்தவர் பரீத் காதர். கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் இவர் தனது குழந்தைகளுக்கு தான் தந்தை இல்லை என மனைவி மீது குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். பின்னர் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் பரீத் காதரின் குழந்தைகள் என்பது உறுதியானது. இதனையடுத்து முன்னாள் மனைவி மீது அபத்தமாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக நூதன தண்டனை வழங்க கோர்ட்டு முடிவு … Read more

இந்திய தேசியக்கொடி அவமதிப்பு… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் மந்திரி

மாலே, இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் சர்ச்சையில் சிக்கியவர் மாலத்தீவு முன்னாள் மந்திரி மரியம் ஷியுனா. தற்போது இரண்டாவது முறையாக மரியம் ஷியுனா சர்ச்சையில் சிக்கி உள்ளார். மாலத்தீவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முன்னாள் மந்திரி மரியம், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றாக ‘மிகப்பெரும் பின்னடைவை … Read more