பாலின மாற்று அறுவை சிகிச்சை மனித கண்ணியத்திற்கு அச்சுறுத்தல்: வாடிகன் அறிவிப்பு

வாடிகன் சிட்டி: பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை ஆகியவை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் அறிவித்துள்ளது. மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட இந்த அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் … Read more

இந்தியாவை மீண்டும் சீண்டிய மாலத்தீவின் முன்னாள் அமைச்சர்… கடும் எதிர்ப்பினால் அந்தர் பல்டி!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட  முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா, இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக ஒரு சர்ச்சைக்குரிய செயலைச் செய்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் கனமழை: அணை உடையும் அபாயம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

கான்பெரா, ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ரிச்மண்ட், வின்ட்சர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக சிட்னி நகரில் ரெயில் தண்டவாளத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்கு ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சிட்னி நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள வாரகம்பா அணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே எந்த நேரத்திலும் அணை உடையும் அபாயம் இருப்பதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் … Read more

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: எப்பிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்

ஹைதராபாத்: அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிலீவ்லேண்ட் பகுதியில் தெலுங்கு மாணவர் உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரோடு சேர்ந்து அமெரிக்காவில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். கொலை, விபத்து, மர்ம உயிரிழப்பு மற்றும் இதர விஷயங்கள் இந்திய மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளன. அமெரிக்காவில் ஏற்கெனவே 13 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது 14-வது மாணவனாக சாய் … Read more

என் வயது 14 தான்…!! பள்ளி மாணவர்களை பாலியல் வலையில் வீழ்த்திய இளம்பெண்

வாஷிங்டன், அமெரிக்காவில் 23 வயது இளம்பெண் தன்னை 14 வயது சிறுமி என கூறி பள்ளி மாணவர்கள் பலரை பாலியல் விருப்பத்திற்கு பயன்படுத்தி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, அலைசா ஆன் ஜிங்கர் என்ற இளம்பெண் பாலியல் விருப்பத்துடன் டீன் ஏஜ் சிறுவன் ஒருவனை அணுகியுள்ளார். அவனை சந்தித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட விரும்பி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து, தம்பா காவல் துறை ஜிங்கரை கைது செய்துள்ளது. … Read more

தூதரகத்திற்குள் போலீஸ் நுழைந்து கைது நடவடிக்கை… ஈக்வடாருடன் தூதரக உறவை முறித்தது மெக்சிகோ

ஈக்வடார் நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜார்ஜ் கிளாஸ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான மக்களை பலிவாங்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கிளாசிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில லஞ்ச ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் ஈக்வடாரின் கிட்டோ நகரில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஜார்ஜ் கிளாஸ், தனக்கு அரசியல் … Read more

சீனாவில் அதிர்ச்சி: புயல் வீசி வீட்டின் ஜன்னலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு 3 பேர் பலி

பீஜிங், சீனாவின் தெற்கே ஜியாங்சி மாகாணத்தில் கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து கடுமையான புயல் வீசி வருகிறது. இதில் சிக்கி, 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இதனால், 5,400 வீடுகள் சேதமடைந்து உள்ளன. 3.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புயலில் இருந்து பாதுகாக்கும் வகையில், 1,600 குடியிருப்புவாசிகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டது. இது மூன்றாம் நிலை எச்சரிக்கையாகும். 2013-ம் ஆண்டில் … Read more

தைவான்: தினசரி நில அதிர்வுகள் எண்ணிக்கை 314-ல் இருந்து 89 ஆக குறைவு

தைப்பே, தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ந்தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. தைப்பேவில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. தைவானின் கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கின. சில சரிந்து விழுந்தன. தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில், 1999-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, 2,400 பேர் உயிரிழந்தனர். … Read more

200 துண்டுகளாக மனைவியை வெட்டிக்கொன்ற ராட்சசன்… நாயை வாஷிங் மெஷினில் போட்டும் கொலை!

World Bizarre News: மனைவியை 200 துண்டுகளுக்கும் மேலாக வெட்டி கொன்று, வளர்ப்பு எலியை மிக்ஸியில் போட்டு கொன்ற கொடூர சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. 

சூரிய கிரகணம்.. தப்பி தவறிக்கூட இவற்றை செய்யாதீங்க… எச்சரிக்கும் நாஸா..!!

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமியை அடைவதை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது.