பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்… போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“தேர்தல் ஆதாயத்துக்காக…” – பயங்கரவாதம் குறித்த ராஜ்நாத் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: “பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஓடிவிட்டால் அங்கும் சென்று அவர்களை கொல்வோம்” என்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், தேர்தலை கருத்தில் கொண்டு மிகை தேசியவாத உணர்வைத் தூண்டவே இவ்வாறு பேசி இருப்பதாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானை தூண்டும் விதமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி இருக்கிறார். இதனை பாகிஸ்தான் கண்டிக்கிறது. பாகிஸ்தான் மண்ணில் நீதிக்குப் புறம்பான கொலைகளில் … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம்; நடப்பு ஆண்டில் 10-வது சம்பவம்

நியூயார்க், அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என இந்திய தூதரகம் உறுதி அளித்துள்ளது. அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கிளெவ்லேண்ட் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் உமா சத்யசாய் கத்தே. இவர் திடீரென மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் … Read more

அதிர்ஷடம்னா இதுதான்… பட்டனை தப்பா அழுத்தியும் அடிச்சது லாட்டரி – கோடியில் புரளும் பெண்

America Lottery News: லாட்டரி மெஷினில் தவறான பட்டனை அழுத்தி பெற்ற லாட்டரி டிக்கெட் மூலம் ஒரு பெண்மணி பல கோடிகளுக்கு அதிபதியாக மாறிவிட்டார். இந்த சம்பவம் குறித்து இதில் காணலாம். 

ஏஐ மூலம் இந்திய பொதுத் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி: மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு எல்லா தளங்களிலும் அதிகரித்து வரும் சூழலில் அரசியலிலும் ஏஐ பயன்பாடு இருக்கிறது. ஆக்கபூர்வமான பயன்பாடுகள் கவனம் ஈர்க்கும் நிலையில், அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தலையே சீர்குலைக்க சீனா சதித் திட்டம் தீட்டுவதாக ஓர் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டு பேரதிரிச்சியைக் கடத்தியுள்ளது தகவல் தொழில்நுட்ப … Read more

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக பதிவு

டிரென்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் (வெள்ளிக்கிழமை, ஏப்.5) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். இதை அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10.23 மணி அளவில் லெபனான் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்துக்கு 45 மைல் மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இதுவரை பதிவு ஆகவில்லை என நியூயார்க் நகரின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது. களத்தில் … Read more

இங்கிலாந்தில் வினாடி-வினா போட்டி: இறுதிப்போட்டிக்கு தேர்வான கொல்கத்தா பட்டதாரி

லண்டன், இங்கிலாந்தின் பிரபல பிபிசி தொலைக்காட்சி ‘யுனிவர்சிட்டி சேலஞ்ச்’ என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது. அந்த நாட்டின் மிகவும் கடினமான வினாடி வினா போட்டியாக கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இந்த நிலையில் இந்த வினாடி வினா போட்டி அண்மையில் தொடங்கிய நிலையில் அதன் அரைஇறுதி சுற்று கடந்த வாரம் நடந்தது. இந்த போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழு … Read more

கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது – இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

கொழும்பு, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பேசுபொருளாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசும், தி.மு.க.வும்தான் காரணம் என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன என பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. இதனிடையே கச்சத்தீவை மீட்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் … Read more

வெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் ஜுவான் மரணம்

கராகஸ், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்தவர் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (வயது 114). இவர் கடந்த 1909 மே மாதம் 27-ந்தேதி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் பிறந்தார். மேலும் கடந்த 2022-ம் ஆண்டில் உலகில் உயிருடன் வாழும் மிக அதிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு இவர் சொந்தக்காரராக மாறினார். இந்தநிலையில் தற்போது உடல்நலக்குறைவால் பெரெஸ் மோரா மரணம் அடைந்தார். இவருக்கு 11 குழந்தைகள், 41 பேரக்குழந்தைகள் மற்றும் … Read more

“கச்சத்தீவு விவகாரத்தில் வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” – இலங்கை அமைச்சர்

கொழும்பு: “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தமிழகத்தில் இதுதொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கச்சத்தீவை யார் தாரைவார்த்தது என்ற விவாதங்களுக்கு மத்தியில் அதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே, “கச்சத்தீவை … Read more