பால்டிமோர் பாலம் விபத்து… கப்பலில் உள்ள 20 இந்திய பணியாளர்கள் நிலை என்ன..!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பாலத்தின் மீது கப்பல் மோதியதன் காரணமாக 2.6 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. கப்பலில் 20 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் உட்பட 21 பணியாளர்கள் இருந்தனர்.

கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டாவா: கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்துக்காக 5 ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும். ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படும் என்றும் கனடா அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: இம்ரான்கானின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை … Read more

மொழிப்பிரச்சினையால் குளறுபடி… பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை

செக் குடியரசின் பிராக் நகரில் உள்ள புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோனைக்காக வந்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் தனக்கான பரிசோதனை குறித்து கூறியிருக்கிறார். ஆனால், அவர் பேசிய மொழியை சரியாக புரிந்துகொள்ளாத மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என தவறாக நினைத்து அதற்கான வார்டுக்கு அனுப்பி உள்ளனர். அங்கு ஏற்கனவே வேறு பெண்ணுக்கு கருக்கலைப்புக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். அந்த வார்டில் … Read more

தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

ஜெருசலேம், காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 250-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசா மீது போர் தொடுத்தது. இந்த போர் சுமார் 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசா தரப்பில் இதுவரை 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். … Read more

சோமாலியாவுக்கு 14 லட்சம் காலரா தடுப்பூசி வழங்க ஐ.நா. முடிவு

மொகாதிசு, ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 2016-ம் ஆண்டு முதல் காலரா தொற்று வேகமாக பரவுகிறது. அதன்படி கடந்த 3 மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 4 ஆயிரத்து 500 பேருக்கு காலரா தொற்று பரவி உள்ளது. அவர்களில் 54 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அங்கு விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் காலரா இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த சோமாலியாவுக்கு 14 லட்சம் வாய்வழி காலரா தடுப்பூசி வழங்க … Read more

காசாவின் ஷிபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படைகள், காசாவின் வடக்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். வான் தாக்குதல், தரைவழி தாக்குதல், கடல் வழி தாக்குதல் என மும்முனை தாக்குதல்களில் 32,845 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படையெடுப்பு காரணமாக இடம்பெயர்ந்த பல லட்சம் மக்கள், தெற்கு முனையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதலைத் தொடங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் தங்களின் … Read more

அமெரிக்காவின் 20 நகரத்தில் பாஜக.வினர் கார் பேரணி

புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவை தெரிவிக்க அமெரிக்காவின் 20 நகரங்களில் வெளிநாடு வாழ் பாஜக ஆதரவாளர்கள் கார் பேரணி நடத்தினர். மேரிலாண்டின் வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க வாழ் சீக்கியர்கள் ஞாயிற்றுக்கிழமை கார் பேரணி நடத்தினர். இவர்கள், பிறகு பாஜக கொடிகள் மற்றும் அமெரிக்க தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட கார்களில் ஊர்வலம் சென்றனர். பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அட்லாண்டாவில் நடைபெற்ற பேரணியில் சுமார் 150 கார்கள் இடம்பெற்றன. அனைத்தும் பாஜக கொடி, … Read more

சீண்டி பார்க்கும் சீனா… அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்டு அத்துமீறல்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அந்த வகையில், சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது. 

ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

வாஷிங்டன், விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. அதன்படி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என … Read more