பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடானின் மிக உயரிய விருது: மன்னர் ஜிக்மே கேசர் வழங்கினார்

பாரோ: பூடான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே சமீபத்தில் இந்தியா வந்தபோது, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, பூடான் வருமாறு மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் சார்பில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பிரதமர் மோடி நேற்று பூடான் சென்றார். பாரோ விமான நிலையத்தில் அவரை பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். ‘‘எனது அண்ணன் நரேந்திர மோடி, பூடானுக்கு வருக’’ என்று இந்தியில் அவர் வரவேற்பு அளித்தார். … Read more

‘புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறேன்’ – பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்

லண்டன்: பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 42 வயதான அவர், பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி ஆவார். ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்துள்ளார். “எனக்கு … Read more

பூட்டான் அரசின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி

திம்பு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டானுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பூட்டானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து பாரோ விமான நிலையத்தில் இருந்து பூட்டானின் தலைநகர் திம்புவுக்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பயணித்தார். அப்போது வழிநெடுகிலும் இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி … Read more

'பூட்டான் மக்களின் இனிமையான வரவேற்பு' – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

திம்பு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டானுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பூட்டானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து பாரோ விமான நிலையத்தில் இருந்து பூட்டானின் தலைநகர் திம்புவுக்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பயணித்தார். அப்போது வழிநெடுகிலும் இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி … Read more

இந்தோனேசியாவில் ரிக்டர் 6.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்ட்டா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பல்வேறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : Indonesia  Earthquake  இந்தோனேசியா  நிலநடுக்கம் 

அதானியின் காற்றாலை மின் திட்டத்துக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு

ராமேசுவரம்: அதானியின் கிரீன் எனர்ஜி லிமிடெட் கடந்த ஆண்டு 442 மில்லியன் டாலர் மதிப்பில் மன்னார் மற்றும் பூநகரி கடற்பகுதியில் 483 மெகாவாட் அளவிலான 2 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இலங்கை அரசிடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த திட்டத்தால் மன்னார் பல்லுயிர் சுற்றுச்சூழலுக்கும், காற்றாடி இறக்கைகள் ஏற்படுத்தும்ஒலி மாசினால் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். கடல் நீருக்கடியில் பொருத்தப்படும் பிரம்மாண்ட மின் கேபிள்களால் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படும் எனக் கூறி, இலங்கையின் சுற்றுசூழல் ஆர்வலர்கள் … Read more

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இப்போது பரவலாக உள்ளது. குறிப்பாக சிறுநீரக மருத்துவத்தில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை … Read more

‘அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் கவனத்துக்கு…’ – இந்திரா நூயி ‘வார்னிங்’ உடன் அறிவுரை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக வன்முறைத் தாக்குதல்களில் உயிரிழப்பது அதிகரித்துள்ள நிலையில், பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயி இந்திய மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். “கவனமாக இருங்கள். உள்ளூர் சட்டங்களை மதித்து நடங்கள். போதை வஸ்துக்கள் பயன்படுத்தாதீர்கள். அளவுக்கு அதிகமாக குடிக்காதீர்கள். இவற்றைச் செய்தால் இந்த நாட்டில் நீங்கள் உங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துகளை ஒரு வீடியோவாகப் பதிவு செய்து அவர் … Read more

காசாவில் உடனடி போர்நிறுத்தம்.. தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்குள்ள அப்பாவி மக்கள் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். உதவிப்பொருட்கள் சரிவர சென்று சேராததால் மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் கூறி வருகிறது. இது ஒருபுறமிருக்க சண்டையை நிறுத்துவதற்கு அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. 6 வார கால போர்நிறுத்தத்தை மையப்படுத்தி கத்தாரில் இன்று … Read more

கடற்கரை மணலை எடுத்தால் ₹2 லட்சம் அபராதம்… எச்சரிக்கும் கேனரி தீவுகள் நிர்வாகம்!

கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுராவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடற்கரையில் இருந்து மணல், கற்கள் மற்றும் பாறைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று கேனரி தீவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.