உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை.. நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்

பிரஸ்ஸல்ஸ்: ரஷியா-உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் தொடர்ந்து உதவி செய்கின்றன. நேட்டோவின் சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் படைகளை வழங்கலாம் என தகவல் பரவியது. ரஷியாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள போராடும் உக்ரைனுக்கு உதவ, ராணுவ வீரர்களை அனுப்புவதற்கு சில நாடுகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாமா? என்று பரிசீலனை செய்வதாக ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று கூறியிருந்தார். ஸ்லோவாக்கியா ராணுவ வீரர்களை அனுப்புவது … Read more

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல்

புடாபெஸ்ட், நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கினார். இதனிடையே கடந்த ஆண்டு பின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்ந்தது. தொடர்ந்து சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய நேட்டோ நாடுகள் ஒப்புதல் அளித்தன. இதில் ஹங்கேரி அரசு மட்டும் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் … Read more

அபிதாபி கோவிலில் தரிசனம் செய்ய வேண்டுமா? இந்த விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!

Hindu Temple Devotees Worship : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஹிந்து கோயில், பொதுமக்கள் தரிசனத்திற்காக மார்ச் மாதம் முதல் நாளில் இருந்து திறக்கப்படும். 

WTO கூட்டத்தில் சேவைத்துறை தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு வெற்றி! ஒருமித்த கருத்து உண்டானது

World Trade Organization Ministerial Conference : உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் இருப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வணிகம் செய்வது சேவைத் துறைக்கு சுலபமாக மாறிவிட்டது…

இந்தியாவைப் போல சீன இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

வாஷிங்டன்: சீன இறக்குமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ளதைப் போல அமெரிக்காவும் பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் இருவர் அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ஷரோட் பிரவுண் மற்றும் ரிக் ஸ்காட் ஆகிய இரண்டு எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சீனாவிலிருந்து நாள்தோறும் வரி விலக்கு பிரிவில் ஏராளமான பொருட்கள் அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகின்றன. உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க சீன அரசு முக்கிய துறைகளுக்கு மானியங்களை வழங்கி வருவதுடன், தொழிலாளர்களுக்கான செலவினமும் அங்கு குறைவாக … Read more

காசா: ரமலானின்போது போர் நிறுத்த ஒப்பந்தம்… பைடன் சூசகம்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் பிடியில் உள்ள மீதமுள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், … Read more

“நெருங்கும் ரமலான்… காசா போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம்!” – ஜோ பைடன் புதிய தகவல்

ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது. ஆனால் ஹமாஸ் … Read more

காசாவில் 10 கி.மீ. நீள பெரிய சுரங்க பாதை; நெட்வொர்க்கை கைப்பற்றி அழித்தது இஸ்ரேல்

டெல் அவிவ், காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நேற்று கூறும்போது, காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்க பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்து உள்ளனர். காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய … Read more

திமோரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

பீஜிங், திமோர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 4.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமோரில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : திமோர்  நிலநடுக்கம்  Timor  Strong Earthquake 

மதத்தை அவமதித்துவிட்டார்; அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்து சென்ற பெண்ணை சூழ்ந்த கும்பல் – அதிர்ச்சி சம்பவம்

லாகூர், இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். இந்நாட்டில் இஸ்லாமிய மதக்கடவுள், புத்தகம் குறித்து அவதூறு தெரிவிக்கும்வகையில் பேசினால் மரண தண்டனை விதிக்கும் வகையில் மதநிந்தனை சட்டம் அமலில் உள்ளது. மேலும், மதத்தை அவமதித்துவிட்டனர் என கூறி அப்பாவி மக்களையும் தாக்கி கொல்லும் கும்பல் தாக்குதல் சம்பவங்களும் பாகிஸ்தானில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் லாகூர் நகரை சேர்ந்த இளம்பெண் தனது கணவருடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகத்திற்கு சென்றுள்ளார். அந்த பெண் அரபு … Read more