இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு

காசா, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது இதையடுத்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு … Read more

50 ரூபாய் மட்டுமே மிச்சம்.. மரணப் படுக்கையில் இருந்த தந்தையை ஏமாற்றி ரூ.5 கோடியை சுருட்டிய மகன்

லண்டன்: இங்கிலாந்தின் நோர்போக் மாவட்டம் அட்டில்பரோ பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பிக்கெல் (வயது 58). முன்னாள் ராணுவ வீரர். இவரது தந்தை பீட்டர் பிக்கெல் கடந்த 2015ம் ஆண்டு முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது நினைவாற்றல் குறைந்த நிலையில் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளார். அவர் கிட்டத்தட்ட மரணப் படுக்கையில் இருந்ததால், அவரது வீடு மற்றும் நிதிகளை நிர்வகிக்கும் சட்டப்பூர்வ அதிகாரத்தை மகனான டேவிட் பிக்கெல் பெற்றிருக்கிறார். இந்த அதிகாரத்தை பயன்படுத்தி டேவிட் … Read more

உலகின் வயதான மனிதர் பெருவில் வாழ்கிறார்: 1900-ம் ஆண்டில் வாழ்ந்தவர்

லிமா: பெரு நாட்டில் 1900-ம் ஆண்டு பிறந்த மார்சிலினோ அபாட் உலகின் மிகவும் வயதான நபராக நம்பப்படுகிறார். மார்சிலினோ அபாட், மத்திய பெருவின் ஹுவானுகோ நகரில் பிறந்தவர். தாவரங்கள் மற்றும்விலங்கினங்கள் சூழ்ந்து காணப்படும் இயற்கை சூழல்நிறைந்த அப்பகுதியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகாணப்படுகிறது. இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பிறந்துள்ளதை ஆவணங்கள் மூலம் பெருவியன் அதிகாரிகள் கடந்த 2019-ம்ஆண்டில்தான் உறுதிப்படுத்தியுள்ளனர். தன்னுடைய 124-வது பிறந்த நாளை அடையாளப்படுத்தும் மெழுகுவர்த்தி மற்றும் தனது உருவத்தில் செய்யப்பட்ட மாதிரி … Read more

காசா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. … Read more

“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்கிறார்” – காசா விவகாரத்தில் பைடன் அதிருப்தி

டெல் அவில்: இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7, 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேலிய தாக்குதல்களில் தற்போது வரை 33,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். அதோடு, உள்ளூர் சுகாதார அமைச்சகத்தின்படி, கிட்டத்தட்ட 23 லட்சம் … Read more

ஆப்கனில் இந்துக்கள், சீக்கியர்களின் சொத்துகளை மீட்டு ஒப்படைக்கிறது தலிபான் அரசு!

காபூல்: தலிபான் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொத்துகளை மீட்டெடுக்கும் பணி தொடங்க உள்ளது. அதற்கான பணியை அந்த நாட்டில் நீதி அமைச்சகம் மேற்கொள்கிறது. தலிபான் அரசு இதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். இந்தச் சூழலில் இந்த … Read more

சந்திரயான்-3 குழுவுக்கு அமெரிக்காவில் விருது

வாஷிங்டன், சந்திரயான்-3 விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்நிலையில், அமெரிக்காவில் கொலரோடாவில் வருடாந்திர விண்வெளி கருத்தரங்கம் நடந்தது. அதில், விண்வெளி ஆராய்ச்சிக்காக, சந்திரயான்-3 திட்ட குழுவுக்கு மிகவும் மதிப்புவாய்ந்த ஜான் எல்.’ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை ‘இஸ்ரோ’ சார்பில் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டார். தினத்தந்தி Related Tags : சந்திரயான்-3 குழு  அமெரிக்கா  விருது  … Read more

பாகிஸ்தான்: மசூதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து.. போலீஸ்காரர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 5 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மசூதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள், தொழுகை நடைபெற்றபோது தங்களுக்கு … Read more

காசாவின் ரபா நகரை கைப்பற்றியே தீருவோம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை – அமெரிக்கா எதிர்ப்பு

ஜெருசலேம், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டின் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசியதுடன் அந்த நாட்டுக்குள் ஊடுருவி கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிப்பதாக சூளுரைத்து காசா மீது போரை தொடங்கியது. 6 மாதங்களை கடந்த பிறகும் இந்த போர் … Read more

'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்… மனித வரலாற்றில் முக்கியமானவர் – ஏன்?

Physicist Peter Higgs Passes Away: ‘கடவுளின் துகள்’ என்றழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவர் குறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.