அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டா கரடிகளை அனுப்பும் சீனா

பீஜிங், தைவான் விவகாரம், ரஷியா-உக்ரைன் போர் போன்றவற்றில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டுள்ளது. இதனால் இரு தரப்பு உறவிலும் கடும் விரிசல் ஏற்பட்டது. எனவே இரு நாடுகளின் தலைவர்களும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை குறைப்பதாக உறுதியளித்தனர். இந்தநிலையில் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த ஒரு ஜோடி பாண்டா கரடிகளை கலிபோர்னியாவின் சான் பிராஸ்சிஸ்கோ உயிரியல் பூங்காவுக்கு சீனா அனுப்ப உள்ளது. பாண்டா கரடிகளை அழிவில் இருந்து மீட்க கடந்த 1972-ம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவின் … Read more

சீனா: பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து; 2 பேர் பலி

பீஜிங், சீனாவில் போஷான் நகரில் இருந்து குவாங்சவ் நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்றது. அந்த கப்பல் குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி விபத்திற்குள்ளானது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தின்போது, பாலத்தில் ஒரேயொரு பஸ் சென்று கொண்டிருந்தது. அது ஆற்றுக்குள் கவிழ்ந்தது. பின்னர், இதுதவிர 4 வாகனங்கள் கவிழ்ந்து நீருக்குள் மூழ்கின. இதில், 2 பேர் உயிரிழந்தனர். 3 பேரை காணவில்லை. கப்பலில் சரக்கு எதுவும் கொண்டு செல்லப்படவில்லை. கப்பலின் கேப்டனை போலீசார் … Read more

பாகிஸ்தான்: பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல்-மந்திரியாகிறார் மரியம் நவாஸ்

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் கடந்த 8-ந்தேதி பொது தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடந்தது. எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்த தேர்தலில், பஞ்சாப் மாகாண சட்டசபைக்கான வாக்கு பதிவும் நடந்தது. 12 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியானது, 137 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 113 தொகுதிகளில் … Read more

உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

புதுடெல்லி: மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை ஒரு வார காலம் நடத்தியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக 78 சதவீதம் பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 65 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 63 சதவீத வாக்குகள் … Read more

Farmers Protest: பாரிஸை சுற்றி வளைத்துள்ள விவசாயிகள்… பிரான்ஸில் வலுக்கும் போராட்டம்!

Farmers Protest in Europe: டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். இந்தியா மட்டும் இன்றி ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய தலிபான்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனையை தலிபான் நிறைவேற்றியுள்ளது. அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான பேர் மைதானத்தில் குழுமியிருந்த நிலையில் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். … Read more

மாணவர்களின் கல்விக்கடன் அதிரடி தள்ளுபடி! தேர்தல் 2024 மந்திரத்தில் மாயமாகும் கடன்கள்!

Education Loan Cancellation Latest Update : அமெரிக்காவில் இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகம். எனவே கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் கடன் வாங்கி படிப்பது இயல்பானது

நிஜமாக தொடங்கும் பாபா வங்காவின் 2024 கணிப்புகள்..!

Baba Vanga: புற்றுநோய்க்கான மருந்துகள் 2024 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்படும் என அவரது கணப்பில் இடம்பெற்றிருந்த நிலையில், அது தொடர்பான பெரிய அறிவிப்பை ரஷ்ய மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.  

முடிவுக்கு வந்த இழுபறி: பாகிஸ்தானில் மீண்டும் பிரதமராகும் ஷபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத், பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், ஊழல் வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப் இ இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 93 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 75 இடங்களிலும், … Read more

Suspect shooting at a gym: panic in Sydney | ஜிம்மில் மர்மநபர் துப்பாக்கி சூடு: சிட்னியில் பரபரப்பு

சிட்னி: சிட்னியில் உள்ள ஜிம்மிற்குள் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியா, மேற்கு சிட்னியில் உள்ள ஜிம்மில் சுமார் 30 பேர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ‘ஹெல்மெட்’ அணிந்தபடி மர்மநபர் ஒருவர் ஜிம்மிற்குள் நுழைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். மக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தவர்கள் … Read more