இஸ்ரேலுக்கு எதிராக… அடுத்த 3 நாட்களுக்கு இணையதள தாக்குதல் எச்சரிக்கை

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடுமையான தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியில் இசை கச்சேரி நடந்தபோது, உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், இளம்பெண்கள், ஆண்கள் என பலரையும் தாக்கினர். இதில், அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் … Read more

தைவான் பூகம்பத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோ: ஜப்பானில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய ஃபுகுஷிமா பகுதியில் 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய – மத்தியதரைகடல் பகுதிகளுக்கான நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுகப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளே … Read more

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு – மீட்புப்பணிகள் தீவிரம்

தைபே, கிழக்கு ஆசிய நாடான தைவானின் தலைநகரான தைபேவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஹூவாலியன் நகரில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானதாக தைவான் அரசு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலம் மற்றும் நீர் பரப்பையொட்டிய பகுதியில் 32 கி.மீ ஆழத்தில் 7.4 புள்ளிகளை கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் நிறுவனம் கூறுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானை தாக்கிய … Read more

கானாவில் 12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது மத போதகர்

அக்ரா: ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகரம் அக்ராவின் நுங்குவா பகுதியைச் சேர்ந்தவர் நூமோ பார்கடே லாவே சுரு எனும் 63 வயது மத போதகர். நுங்குவாவின் பூர்வக்குடி மக்களுக்கு மதகுருமாராக இவர் இருந்து வருகிறார். கானா நாட்டு சட்டப்படி 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே மணமுடிக்கலாம். இருப்பினும் சமய சடங்குகளை முன்னிறுத்தி 12 வயது சிறுமியை மத போதகர் சுரு கடந்த சனிக்கிழமை அன்று மணமுடித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. இதற்கு … Read more

மெக்சிகோவில் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளில் பெண் மேயர் வேட்பாளர் சுட்டுக்கொலை

மெக்சிகோ சிட்டி, தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் வரும் ஜூன் 2-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அங்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசியல் ரீதியான கொலைகளும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் ஆளும் கட்சி பெண் மேயர் வேட்பாளர் கிசெலா கெய்டன், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே, குவானாஜுவாடோவில் உள்ள செலாயா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 38 வயதான கெய்டன், ஒரு … Read more

உலகின் மிக வயதான மனிதர்: வெனிசுலாவின் ஜூவான் 114 வயதில் காலமானார்

காராகாஸ்: கடந்த 2022-ம் ஆண்டில் உலகின்மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா நேற்று முன்தினம் தனது 114 வயதில் காலமானார். ஜுவான் விசென்டே 2022, பிப். 4 அன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றபோது அவருக்கு 112 வயது மற்றும் 253நாட்கள். அப்போது அவர் உலகின்மிக வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். ஜுவான் விசென்டே 11 குழந்தைகளுக்கு தந்தையாவார். 2022 … Read more

25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 9 பேர் உயிரிழப்பு, 1,000 பேர் காயம்

டோக்கியோ: தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இந்தத் தகவலை தைவான் நாட்டு மத்திய புவியியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்தது. நிலம் மற்றும் நீர்ப் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் தைபே நகரின்பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர். அங்கு மின் இணைப்புஉடனடியாக … Read more

தைவான் பூகம்பம் – 9 பேர் உயிரிழப்பு, 900 பேர் காயம்

டோக்கியோ: புதன்கிழமை அன்று தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தால் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு மக்கள் வசித்து வந்த குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. பூகம்பம் ஏற்பட்டதையடுத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் கொண்டுள்ளனர். இருந்தும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர்களை அணுகுவது சவாலான காரியமாக உள்ளது. இதில் சிலர் சுரங்களில் … Read more

ஜப்பானில் அனைவருக்கும் ஒரே குடும்ப பெயர்… திருமண சட்டத்தினால் உண்டாகும் வினோத நிலை

ஜப்பானில், திருமணம் செய்யும் தம்பதிகள் சட்டப்பூர்வமாக ஒரே குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏறக்குறைய அனைத்து விதமான சந்தர்ப்பத்திலும், திருமணம் செய்து கொள்ளும் பெண் தனது கணவரின் குடும்ப பெயரை ஏற்றுக் கொள்கிறார்.

பூமியை நெருங்கும் வால்நட்சத்திரம் – 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் அரிய நிகழ்வு

வாஷிங்டன், ‘வால் நட்சத்திரம்’ என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் ஆகும். ஒரு வால் நட்சத்திரமானது சூரிய குடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின் வெப்பத்தால் அதில் உள்ள பனி ஆவியாகி, வால் நட்சத்திரத்தின் கருவைச் சுற்றி ஒருவித ஒளிரும் தன்மைகொண்ட வாயு மற்றும் தூசியால் ஆன வால் போன்ற அமைப்பு உருவாகிறது. இந்த வால் நட்சத்திரங்கள் காண்பதற்கு அரிதான நிகழ்வாகவும், வானியல் அற்புதங்களில் … Read more