ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில்: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்

துபாய்: ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வந்துள்ளார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் முகமதுபின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் … Read more

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அபுதாபி, இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து துபாய் – அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு … Read more

We need a corruption-free government that is inclusive: Modi | அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற அரசு தேவை: மோடி

துபாய், துபாயில் நேற்று நடந்த சர்வதேச அரசுகள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”உலகிற்கு தற்போது அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற அரசுகள் தேவை. ‘சிறிய அரசு; பெரிய நிர்வாகம்’ என்ற தாரக மந்திரத்தை, 23 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்,” என தெரிவித்தார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நேற்று முன்தினம் … Read more

கம்போடியாவில் தினமும் 4 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு

புனோம் பென், தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று தேசிய எய்ட்ஸ் ஆணையம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “கம்போடியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 1,400 பேர் புதிதாக எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் அல்லது ஒரு நாளைக்கு சுமார் 4 பேர் இந்த எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் எச்.ஐ.வி.யால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். … Read more

‘இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி’ – அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைத்தார். அப்போது இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதாக தெரிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்றார். அப்போது அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்ட 27 ஏக்கர் நிலத்தை அந்த நாட்டு அரசு வழங்கியது. இதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கோயில் கட்டுமான பணி தொடங்கியது. ரூ.700 … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

மனிலா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் உள்ள சுலாத் நகரின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை 7.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 37.4 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தினத்தந்தி Related Tags : Philippines  Earthquake  பிலிப்பைன்ஸ்  நிலநடுக்கம் 

Dutch ex-prime minister couple who died by mercy killing | கருணை கொலை மூலம் அன்பு மனைவியுடன் மரணித்த நெதர்லாந்து மாஜி பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆம்ஸ்டர்டாம்: தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது. தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது.இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் … Read more

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மருத்துவமனையில் அனுமதி

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (வயது 98) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய்த்தொற்று ஏற்பட்டதால் தேசிய இதயநோய் மருத்துவமனையில் மகாதீர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முதுமைசார்ந்த உடல்நல பிரச்சினைகள் மற்றும் நோய்த்தொற்று காரணமாக கடந்த சில வருடங்களாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மகாதீர். இதய நோய் தீவிரமடைந்த நிலையில், அவருக்கு பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டது. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், தற்போதைய துணை பிரதமர் … Read more

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

சாண்டியாகோ, சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 7.01 மணியளவில் சாண்டியாகோ நகரின் வடக்கே 524 கிலோமீட்டர் தூரத்தில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் … Read more