ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

வாஷிங்டன், விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. அதன்படி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என … Read more

அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே துப்பாக்கி சூடு- 7 பேர் காயம்

இண்டியானாபோலிஸ்: அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் நேற்று நள்ளிரவில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு, ரோந்து போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலில் 7 இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் வயது 12 முதல் 17 … Read more

பாகிஸ்தானில் நிதி நெருக்கடி எதிரொலி: சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு

இஸ்லாமாபாத்: அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியை காரணம் காட்டிபிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்புஅளிக்கப்படுவது முக்கிய சம்பிரதாய நடவடிக்கையாக உள்ளது. இந்த நடவடிக்கை பிரதமருக்கு அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவற்றை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சரவை … Read more

இங்கிலாந்தில் மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஆளுங்கட்சிக்கு கடும் பின்னடைவு.. பிரதமரின் தொகுதியும் ரிஸ்க்

லண்டன்: இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பது தொடர்பாக சிவில் சமூக பிரச்சார அமைப்பான ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ மெகா கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சியைவிட 19 புள்ளிகள் முன்னிலையுடன், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இப்போது … Read more

பருவநிலை மாற்றம் குறித்து கேள்வி; எங்களுக்கு பாடம் எடுக்க அதிகாரம் அளித்தது யார்? – பிபிசி செய்தியாளரை கண்டித்த கயானா அதிபர்

லண்டன்: தன்னை பேட்டி கண்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை கயானா நாட்டு அதிபர் இர்ஃபான் அலி கடுமையாக சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட சூழலியல் பிரச்சினைகள் இன்று உலகம்எதிர்கொள்ளும் மிகப்பெரும் சிக்கலாக கருதப்படுகிறது. இதனால், நிலையான வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த பல நாடுகள் முயற் சித்து வருகின்றன. இந்நிலையில், பிபிசி தொலைக்காட்சி செய்தியாளர் கயானா நாட்டுஅதிபர் இர்ஃபான் அலியை நேற்று பேட்டி கண்டார். அப்போது அந்த … Read more

இத்தாலியில் தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்

ரோம், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 379,000 குழந்தைகள் பிறந்துள்ளன. முந்தைய ஆண்டை விட சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த … Read more

Abby Hensel: ஒரே ஆளை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்! வைரலாகும் வீடியோ..

Conjoined Twins Abby Hensel Marriage : ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள், ஒரே ஆளை மணந்து கொண்ட சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தீங்கு தரும் பயங்கரவாதம்… இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்: ரஷிய தூதர்

புதுடெல்லி, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரிலான இசை அரங்கிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 144 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய 4 பேர் உள்பட சந்தேகத்திற்குரிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், தீங்கு தரும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா … Read more

நேபாளத்தில் டாக்சி ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி

காத்மாண்டு, நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு … Read more