கடற்கரை மணலை எடுத்தால் ₹2 லட்சம் அபராதம்… எச்சரிக்கும் கேனரி தீவுகள் நிர்வாகம்!

கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுராவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடற்கரையில் இருந்து மணல், கற்கள் மற்றும் பாறைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று கேனரி தீவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல பிரதேசம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. கடந்த 9, 10-ம் தேதிகளில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி முகாமிட்டிருந்தார். அப்போது சீன எல்லையை ஒட்டிய பகுதியில் 13,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப் பாதையை அவர் திறந்து வைத்தார். இந்த சுரங்கப் பாதை மூலம் சீன எல்லைப் பகுதிக்கு பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ வாகனங்களை எளிதாக … Read more

இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் வீடியோக்கள்.. இழப்பீடு கேட்டு வழக்கு

நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் … Read more

அமேசான் மழைக்காட்டில் மிகப்பெரிய பழங்கால டால்பின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் உள்ள அமேசான் மழைக்காட்டில் மிகப்பெரிய நதி டால்பின் புதைபடிவ மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் அமேசான் நதிகளில் தஞ்சம் அடைந்ததாகக் கருதப்படும் பெபனிஸ்டா யாகுருனா என்ற டால்பின் இனத்தில் மண்டை ஓடு என மதிப்பிடப்பட்டுள்ளது. அழிந்துபோன இனத்தைச் சேர்ந்த இந்த டால்பின் 3.5 மீட்டர் நீளம் வரை இருந்திருக்கும் என்றும், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின்களில் இது மிகப்பெரிய டால்பின் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த … Read more

பாகிஸ்தான் குவாடர் துறைமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கராச்சி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. குவாடர் துறைமுக வளாகத்தில் பல அரசு மற்றும் துணை ராணுவ அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், குவாடர் துறைமுகத்தில் உள்ள அதிகாரிகள் பணிபுரியும் ஆணைய வளாகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். துறைமுகத்தில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி கொண்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் … Read more

அதிகரிக்கும் Incest உறவு… அமெரிக்காவில் அதிகரிக்கும் ஆபத்துகள் – இதில் என்ன பிரச்னை?

World Bizarre News: அமெரிக்காவில் பரந்த அளவில் மரபணு பரிசோதனைகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

டோக்கியோ, ‘ரிங்க் ஆப் பயர்’ எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில் ஜப்பானின் கிழக்கில் உள்ள இபராக்கி மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ.) தெரிவித்துள்ளது. ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் இதுவரை … Read more

பாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட ரகசிய செய்தி பொதுவெளியில் கசிந்தது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி டொனால்டு லூ, நாடாளுமன்ற குழுவிடம் எழுத்துப்பூர்வமாக சாட்சியம் அளித்தார். அதில் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் என்ன மாதிரியான முறைகேடுகள் நடந்தன என்பதை விவரிக்காத அவர், தேர்தல் மோசடி … Read more

India china border: பிற நாட்டு பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும்? கொந்தளிக்கும் சீனா…

China Oppose Indian Support Of America : அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிராந்தியம் என்று ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா… 

‘அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியாக அங்கீகரிக்கிறோம்’ – அமெரிக்கா @ சீன அறிக்கை

வாஷிங்டன்: அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி அருணாச்சலுக்கு சென்றதைத் தொடர்ந்து அப்பகுதி மீது சீனா மீண்டும் உரிமை கோரியிருக்கும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் இணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். … Read more