நைஜீரியாவில் ஆயுதக் குழு கொலைவெறித் தாக்குதல்: 113 பேர் பலி; 300 பேர் காயம்

லாகோஸ்: நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 113 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். பலர் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ளது ப்ளேட்டூ எனும் மாகாணம். இந்தப் பகுதி இனக் கலவரங்கள், மத மோதல்கள், அரசியல் கிளர்ச்சிகள், கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோருக்கும் – விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள், கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் என பல இன்னல்களுக்குப் பெயர் போன பிரதேசமாக இருக்கிறது. இப்பகுதியால் எப்போதுமே நைஜீரிய … Read more

ஆப்கானிஸ்தானில் 6-ம் வகுப்போடு பள்ளிக்கு பிரியாவிடை : கண்ணீர் வடிக்கும் சிறுமிகள்

காபூல், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அறிவிப்புக்கு மாறாக அவர்களது செயல்பாடு இருந்து வருகிறது. அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் … Read more

Attack on innocent civilians: 113 killed in Nigeria | அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல்: நைஜீரியாவில் 113 பேர் பலி

போக்கோஸ்: நைஜீரியாவில் கிராமங்கள் மீது ஆயுதக்குழுக்கள் நடத்திய தொடர் தாக்குதலில், 113 பேர் பலியாயினர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மத்திய நைஜீரியாவில் உள்ள போக்கோஸ் பகுதியில், ஆயுதக்குழுக்களை சேர்ந்த இரண்டு குழுக்கள் துப்பாக்கி சண்டை நடத்தின. 20 க்கும் மேற்பட்ட வெவ்வேறு சமூகங்களை குறிவைத்து உள்ளூர் கொள்கை கும்பல் இத்தாக்குதலை நடத்தியது. போக்கோஸ் பகுதியில் இருந்து பார்கின் லாடி வரை வன்முறை பரவியது. இதில் 16 பேர் மட்டுமே இறந்ததாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்நாட்டு … Read more

இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து

பெத்லகேம்: உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. பெத்லகேம் நகரில் மாட்டுத் தொழுவத்தில் மரியாள், இயேசுவை பெற்றெடுத்தார் என்று இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மத சான்றோர் குறிப்பிட்டு உள்ளனர். அந்த இடத்தில் கிரேக்க மன்னர் கான்ஸ்டன்டைன் ஏற்பாட்டின் பேரில் கடந்த 333-ம் ஆண்டில் தேவாலயம் கட்டப்பட்டது. சமாரியர் கலகத்தின்போது அந்த தேவாலயம் அழிக்கப்பட்டது. பின்னர் ரோம மன்னர் முதலாம் ஐஸ்டீனியன் … Read more

Christmas celebration in Ukraine after 100 years yesterday | உக்ரைனில் 100 ஆண்டுக்கு பின் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கீவ், ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைனில் 100 ஆண்டுகால வழக்கத்தை மாற்றி, அங்குள்ள மக்கள் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் சூழலில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதுடன், ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில், போர் மேகங்கள் சூழ்ந்துள்ள உக்ரைன் நாட்டில் முதன்முறையாக டிச., … Read more

No Christmas Tree, No Joy In Bethlehem, Birthplace Of Jesus Christ | போரால் அமைதி: பெத்தலகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காசா: ஆண்டுதோறும் எப்போதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் இயேசு பிரான் பிறந்த பெத்தலகேமில் எவ்வித சிறப்பு கொண்டாட்டமும் நடக்கவில்லை. தேவாலயங்கள் , வீதிகள் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது. இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் காரணமாக பெத்லகேம் அமைதியாக காணப்பட்டது. டிச.25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்து வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகின்றன. நள்ளிரவில் பெரும் திரளான மக்கள் குவிந்தனர். இயேசு பிரான் பிறந்த … Read more

Rewind 2023: துருக்கி பூகம்பம் முதல் இஸ்ரேல் Vs ஹமாஸ் வரை – உலகை உலுக்கிய நிகழ்வுகள்

உலகம் முழுக்க 2023-ஆம் ஆண்டில் நம்மைப் பரபரப்பாக்கிய, அதிர்வலைகளை ஏற்படுத்திய‘டாப் 11’ சம்பவங்களை இங்கே ரீவைண்ட் செய்து பார்க்கலாம். நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர், சர்வதேச அளவில் கவனம் பெற்றது முதல் துருக்கி – சிரியா இயற்கைப் பேரழிவுகளைக் சந்தித்தது வரை பலவும் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. அவற்றின் தொகுப்பு. துருக்கி – சிரியா பூகம்பம்: கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாடுகளை உலுக்கிப் போட்டன. … Read more

Hafiz Syed plans to contest general elections in Pakistan | பாக்., பொதுத்தேர்தலில் போட்டியிட ஹபீஸ் சையத் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் கட்சி வரப்போகும் பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவ.26-ம் தேதி குஜராத் கடல் வழியாக ஊடுருவிய லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு … Read more

காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 70+ பேர் பலி

காசா: மத்திய காசாவில் உள்ள மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய காசாவில் உள்ள மகாசி அகதிகள் முகாம் (Maghazi refugee camp) மீது இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய இஸ்ரேலிய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இன்று … Read more